பிரதமருடன் உதயநிதி சந்திப்பின் ரகசியம் இது தான்..! – அதிர்ச்சியை கிளப்பிய சவுக்கு சங்கர்..!

சவுக்கு சங்கர் : தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இந்திய பிரதமர் திரு மோடி அவர்களை நேற்று (பிப்.28) மாலை சந்தித்தார்.

இதுகுறித்து தகவல் தான் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருக்கின்றது. மறுபக்கம் தமிழக அரசியல் நகர்வுகள் குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் எதனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நரேந்திர மோடியை சந்தித்தார் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

அதன்படி அவர் கூறியிருப்பதாவது, இந்த சந்திப்பு தமிழக மக்களின் நலன் சார்ந்து என்று நான் நம்பவில்லை. அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்று தான் பார்க்கிறேன்.

கறுப்பு குடை கூட இல்லை..

ஆட்சிக்கு வரும் முன்பு பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு.. பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது கறுப்பு கொடி காட்டுவது.. கறுப்பு பலூன் பறக்க விடுவது.. உள்ளிட்டவற்றை செய்து கொண்டு.. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கறுப்பு குடையை கூட எடுத்து செல்ல அச்சப்படுகிறார்கள்.

பிரதமரை வரவேற்க வெள்ளை குடை எடுத்துக் கொண்டு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படி இருக்கும் இவர்கள் பாஜகவிடம் சரணடைந்து விட்டார்கள் என்று தான் நான் நம்புகிறேன்.

உதயநிதி ஸ்டாலின் மோடியை சந்தித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள். ஆனால், முக்கியமான காரணமாக வரி எய்ப்பு விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கும் பிளாக் ஷீப் என்ற நிறுவனத்தின் மீது இருக்கும் வருமான வரித்துறையினரின் பிடியை தளர்த்த வேண்டி தான் மோடியை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்தித்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

கறுப்பு ஆடுகளான ப்ளாக் ஷீப்..

தங்களுடைய சேனலை நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை  வரி கட்டாமல் வாங்கி இருக்கின்றது ப்ளாக்ஷீப் நிறுவனம். இதனை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து விட்டார்கள்.

இது குறித்த தகவலகள் பொதுவெளியிலும் வெளியாகிவிட்டது. மட்டுமில்லாமல் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தினார்கள். அதிலும் பல கோடி மதிப்புள்ளான வரி ஏயப்பு நடந்திருப்பதாக வருமானவரித்துறையினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் வரி கட்டவில்லை.. வரி கட்டி விட்டால் பிரச்சனை முடிந்தது என்று நினைத்தால் அது தவறு. இப்போ தான் சிக்கலே ஆரம்பிக்கும், இதையெல்லாம் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்ற ஒரு கேள்வியை நூல் பிடித்து சென்றால்.. அங்கே, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைமை குடும்பம் நேரடியாக தொடர்பில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.

பாஜகவிடம் சரண் அடைந்த திமுக..

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றும் படி பாஜகவிடம் திமுகவினர் சரணடைந்திருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் உதயநிதி ஸ்டாலின் மோடியை நேரடியாக சந்தித்து இருக்கிறார் என்று தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.இவருடைய அந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

ஏற்கனவே பிளாக் ஷீப் என்ற வெறும் Youtube சேனல் நடத்திக் கொண்டிருந்த ஒரு குழு எப்படி இவ்வளவு பெரிய விருது நிகழ்ச்சிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்துகிறார்கள்..? திடீரென சேட்டிலைட் சேனலை ஆரம்பிக்கும் அளவுக்கு முன்னேறுகிறார்கள்…? என்ற கேள்விகள் பொதுவெளியில் முனுமுனுக்கப்பட்டது.

அவர்களை விட அதிக பார்வையாளர்கள் உள்ள எத்தனையோ யூடியூப் சேனல்கள் இன்னும் Youtube சேனல்களாகவே இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக யூடியூபில் சரியாக இயங்காத இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது..? என்று பொதுவெளியில் இணைவாசிகள் பலரும் பேசி வந்தனர்.

தற்போது வருமானவரித்துறையினரின் பிடியில் பிளாக் ஷீப் நிறுவனம் சிக்கி இருக்கிறது. குறிப்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைவராக அறியப்படும் காமெடி நடிகர் விக்னேஷ் காந்த் சிக்கியுள்ளார்.

சிக்கலில் திமுக குடும்பம்..

இவர் வெறும் கருப்பு ஆடு தான். ஆனால் இவரை மேய்க்க கூடியவர்கள் திமுக குடும்பத்தினர். அல்லது திமுக குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

அப்படியான சிக்கலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரதமரை சந்தித்திருக்கிறார். சவுக்கு சங்ரின் இந்த பேச்சு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

சமீபத்தில் பிரபல யூட்யூபர் மற்றும் வலதுசாரி சிந்தனையாளரான மாரிதாஸ் அவர்கள் பிளாக் ஷீப் நிறுவனம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் ஆதரங்களுடன் சில காணொளிகளை வெளியிட்டிருந்தார். இது ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் சவுக்கு சங்கரின் இருந்த பேச்சு இன்னும் இது குறித்த விவாதத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Summary in English : According to media reports, Tamil Nadu’s Honorable Sports Minister, Mr.Udhayanidhi Stalin, met with Prime Minister Narendra Modi in New Delhi to discuss the development of sports in Tamilnadu state. However, A famous journalist Mr.Savukku Shankar suggest that the minister’s visit to the capital was also to escape the clutches of the Income Tax Department, which is currently investigating BlackSheep Crew for alleged financial irregularities and misappropriation of funds.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …