நா வந்துடேனு சொல்லு திரும்ப வந்துடேனு சொல்லு’ என்று csk ரசிகர்களை குஷி படுத்திய பென் ஸ்டோக்ஸ்..!!!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நாள்பட்ட முழங்கால் காயம் இருந்தபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ஐபிஎல் 2023 இல் விளையாடப் போவதை உறுதி செய்துள்ளார். ஸ்டோக்ஸ் தனது முழங்கால் வலியால் மிக நீண்ட காலமாக தனது திறமைக்கு ஏற்றவாறு விளையாட முடியாமல் என்னை மிகவும் வருத்தமடய செய்கிறது.

ஜூன் 1 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு கேப்டனாக இருப்பதாக ஸ்டோக்ஸ் முன்னதாக அறிவித்தபோது, ​​ஐபிஎல் 2023ல் அவர் விளையாடுவர மாட்டாரா என்ற கேள்வி சமூகவலைதளங்களில் பரவலாக பேச பட்டு வந்தது.இப்போது அதற்கு முற்று புள்ளி வைக்க அறிவிப்பு ஒன்றை விட்டுள்ளார்.

ஆஷஸ் தொடரில் கவனம் செலுத்தும் வகையில் நன்றாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​ஸ்டோக்ஸ் சிறந்த முறையில் பந்துவீசுவதில் சிக்கல் ஏற்பட்டது.

31 வயதான அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது இரண்டு ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது, இங்கிலாந்து 162.3 ஓவர்களுக்கு போராடி நியூசிலாந்து வீரர்களை 483 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

ஐபிஎல் 2023ல் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

இங்கிலாந்தின் இந்த தோல்வியைத் தொடர்ந்து பேசிய ஸ்டோக்ஸ், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்குடன் தனது உடலின் நிலை குறித்து பேசியதாகவும், வரவிருக்கும் சில வாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

“நான் ஐபிஎல்லுக்குப் போகிறேன். நான் ‘ஃப்ளெம்ங்’ உடன் உரையாடினேன், என் உடலின் நிலைமையை அவர் முழுமையாக அறிந்திருக்கிறார்.எனவே எனது உடல் முழு தகுதி உடன் இருக்கிறது.நான் புத்துணர்ச்சியுடன் ஐபிஎல்லில் களம் இறங்க உள்ளேன்.என்று பென் ஸ்டோக்ஸ் உறுதி படுத்தி உள்ளார்.இதையடுத்து csk ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam