நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா? – ஸ்டாலின் பதில்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திரு ஸ்டாலின் அவர்கள் நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா?  என்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, அதில் ஒரு நிகழ்வாக அவரை வாழ்த்தும் விதத்தில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா அவர்கள் தமிழ்நாடு வந்தார்.

 அவர் பேசும்போது ஸ்டாலின் அவர்கள் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் வர வேண்டுமென ஃபாரூக் அப்துல்லா கூறியிருந்தார்.

 இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது நீங்கள் தான் அடுத்த பிரதமர் வேட்பாளரா எனக் கேட்ட செய்தியாளர்களுக்கு,  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ‘  திரும்பத் திரும்பச் சொல்கிறேன் யார் வெற்றி பெற்று யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட, யார் பிரதமராக வரக்கூடாது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தான் இப்போதைய எங்கள் கொள்கை உள்ளது  எனக் கூறினார்.

 மேலும் செய்தியாளர்கள் பாதுகாப்பு விழா தேசிய அரசியலுக்கு உங்களை அழைத்திருக்கிறாரே என கேட்டனர்.

 அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே நான் தேசிய அரசியலில் தான் இருக்கிறேன் என சுவாரசியமான பதில் ஒன்றை அழைத்தார்.

 இது சமூக வலைதளங்களில் தற்போது  பேசு பொருளாகியுள்ளது.

 இதுபோன்ற சுவாரஸ்யமான அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்துபடியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …