மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி – பிகார் தேர்தல் முடிவுகள்

பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை பார்த்து பல கட்சிகளும்  பயம் அடைந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே பழமையான கட்சி தெருவில் நாலு பேர் நின்று கத்திக் கொண்டிருக்கும் கட்சி என்ற பொதுவான மனப்போக்கு தற்கால இளைஞர்களிடையே உள்ளது.

ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மிகப் பெரியது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான செல்வாக்கை இந்தியா முழுவதும் நிறுவியிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்று பல மாநிலங்களை தன் கைக்குள் வைத்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் அதன் விஸ்தரிப்பும் கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கியது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி தொடர்பான சில முடிவுகள் வரும் காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போன செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த சில முடிவுகள் தான் அந்த கட்சியின் இந்த நிலைக்கு காரணம் என அரசியல் விமர்சனங்கள் பலரும் பேசி வரும் நிலையில், பாரதியார் ஜனதா கட்சியின் இந்தியாவில் வளர ஆரம்பித்த பொழுது கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியப்பட்டு விட்டது.

இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகென தனித்துவமான அடையாளங்கள் இல்லாமல் அது ஒரு சாதாரண கூட்டணி கட்சியாக இந்தியா முழுவதும் வளம் வந்தது. மேலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை வெளிநாட்டின் கைக்கூலி கட்சியான பரப்புரை செய்ததன் மூலம் இளைஞர்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தெருவோர போராட்ட கட்சி என்ற மனப்பான்மை உருவாகியுள்ளது.

 இந்த நிலையில் நடந்து முடிந்த பீகார் தேர்தலின் முடிவுகள் பலரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பீகாரில் 2010-ம் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி  பெற்றிருந்த நிலையில், 2015 ஆம் தேர்தலில் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது அதன்படி 2010ல் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 29 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர் கூறுகையில் இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புதிய புத்துணர்வை உருவாக்கும் கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின்  எழுச்சி இனி உருவாகும் என கூறுகின்றனர்.

ஆனால் இது ஆர் ஜே டி யின் தயவால் பெற்ற வெற்றி என சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற சுவாரசியமான அரசியல் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம்  இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …