FIFA சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!!

FIFA சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி:

அர்ஜென்டினாவை உலக சாம்பியனாக்கிய கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா ஆடவர் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். பிரான்ஸ் இளம் நட்சத்திர கால்பந்து வீரர் கில்லியன் எம்பாப்பேவை தோற்கடித்து இந்த விருதை வென்றார். கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே ஆகியோர் அந்தந்த அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

ஃபிஃபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி வென்றுள்ளார்:

பெண்கள் பிரிவில், இந்த விருது ஸ்பெயின் வீராங்கனை அலெக்ஸியா புடெல்லாஸுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டது.
இந்த விருதை லியோனல் மெஸ்ஸி இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளார். இத்துடன் இரண்டு முறை கைப்பற்றிய போர்ச்சுகலின் மூத்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோரின் சாதனைகளையும் சமன் செய்துள்ளார்.

PSG கிளப்பிற்காக விளையாடும் மெஸ்ஸி, இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றிருந்தார். ரொனால்டோ 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்த விருதை வென்றார். அதேசமயம் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் லெவன்டோவ்ஸ்கி அதை கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்திய லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பேவை எதிர்த்துப் போட்டியிட்டார். மெஸ்ஸி 52, எம்பாப்பே 44 புள்ளிகள் பெற்றனர்.

லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் உலகக் கோப்பையை வென்றது. ரொனால்டோ மற்றும் லெவன்டோவ்ஸ்கி இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …