இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்..இப்படியா பேசுவது..!!

இனவெறி டுவிட் செய்த மைக்கேல் வாகன்:இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மீது இனவெறி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.அதனால் அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் (ECB) விசாரணையை எதிர்கொள்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை பல கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இப்போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இனவெறி பிரச்சினையில் விவாதப் பொருளாக இருக்கிறார். இதனால் இனவெறி வழக்கு விசாரணை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் (ECB) நடந்து வருகிறது. அசிம் ரபீக், அடில் ரஷீத், ராணா நவேத்-உல்-ஹசன் மற்றும் அஜ்மல் ஷாஜாத் ஆகியோர் 2009 இல் அவர் மீது இனவெறி குற்றம் சாட்டினர்.

மைக்கேல் வாகனின் இந்த ட்வீட் விசாரணையின் மூன்றாவது நாளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த ட்வீட்டில் அவர் இனவெறி கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் 15 அக்டோபர் 2010 அன்று ட்வீட் செய்திருந்தார் – லண்டனில் ஆங்கிலேயர்கள் அதிகம் வசிக்கவில்லை .. நான் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் போல் தெரிகிறது என்று டிவிட் போட்டுள்ளார்.. இது இனவெறியை தூண்டுவதாக இருந்தது என சமூக ஊடகங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விசாரணை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது:

இருப்பினும், எனக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ECBயின் குற்றச்சாட்டை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மறுப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ரஷீதும் சாட்சியமளித்தார். ECB இன் முன்னணி வழக்கறிஞர் Jane Mulcahy-Casey மூலம் வாகனிடம் சுமார் 90 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. ட்வீட்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை . ரஃபிக் மற்றும் ரஷீத் இருவரும் வாகன் எங்கள் இருவரையும் ஒரு மோசமாக கிண்டலடித்துள்ளர் என முல்காஹி தெரிவித்தார்.

எனக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ECBயின் குற்றச்சாட்டை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மறுத்தார். ரபீக்கின் கருத்துக்குப் பிறகு ECB குற்றச்சாட்டு வைத்தது .இதேபோல இங்கிலாந்து அணி வீரர் அடில் ரஷித், ஆசிய வீரர்களைப் பற்றி மைக்கேல் வாகன் தரக்குறைவான கருத்துக்களைக் பேசியதாக கூறி, முன்னாள் கேப்டன் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். யார்க்ஷயர் அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் அணி வீரர் அசிம் ரபிக், ஆசிய வீரர்களை தரக்குறைவான கருத்துக்களை வான் கூறியதாக தெரிவித்தார் என்று கூடிரினார். மைக்கேல் வாகன் தன் மேல் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார்.ஆனால் அவர் மீது பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பிபிசி அவரை போட்காஸ்டில் இருந்து கைவிட்டது. மைக்கேல் வாகன் யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய 2009 சீசனில் நடந்த சம்பவம் குறித்து மைக்கேல் வாகன் மீது அசிம் ரபிக் கூறிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து மைக்கேல் வாகனுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …