தமிழ்நாட்டில் 50 மாவட்டம் RSS கொடுத்த அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் RSS பேரணி அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ்.

இந்த நிலையில் பல வாரங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில்  நேற்று ஆர் எஸ் எஸ் அமைப்பு  தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் எங்களுக்கு  பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதைக் கேட்ட தமிழக அரசு வழக்கறிஞர் தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் இருக்கிறதா ?  என கேலியாக தனது பதில் வாதத்தை எடுத்து வைத்தார்.

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்பது கூட தெரியாத ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டின் கலாச்சார விழுமியங்கள் பற்றி என்ன தெரியும் என ஆர் எஸ் எஸ் பேரணி கொடுத்து தமிழக வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் நாங்கள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக கடையை விதிக்கவில்லை ஒரு சில இடங்களில் சில பிரச்சனைகள் வருவதற்கு முகாந்திரம் இருப்பதால் சில இடங்களில் மட்டும் தான் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளோம் என தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை எடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் ஒரு சீல் இடப்பட்ட கடிதத்தில் எந்தெந்த இடத்தில் அனுமதி கொடுக்கிறீர்கள் என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.

தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமல் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்ய முனைகிறது என எதிர் கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுபோல சுவாரசியமான பல அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam