“ப்பா.. அழகு ராட்சசி..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – கிக் ஏற்றும் ரம்யா நம்பீசன்..!

பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்தார். கேரளாவில் கடந்த 987 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2012 ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதற்கு முன்பே பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். என்றாலும் கூட கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரம்யா நம்பீசன்.

இந்த திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், இளைஞன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது என்று கூறலாம்.

அதன்பிறகு டமால் டுமில், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், சத்யா, சீதக்காதி, மெர்க்குரி, அக்னி தேவி, நட்புனா என்னனு தெரியுமா, என்றாவது ஒரு நாள், பிளான் பண்ணி பண்ணனும், மைடியர் பூதம் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ரம்யா நம்பீசன்.

சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மை டியர் பூதம் திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியாகியிருக்கும் பாஹிரா திரைப்படத்திலும் வேதவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் தமிழரசன் மற்றும் ரேஞ்சர் உள்ளிட்ட இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் பிஸியாக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான நடிகை ஓவியாவின் நெருங்கிய தோழி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் சில காலம் ரம்யா நம்பீசனின் வீட்டில் தான் நடிகை ஓவியா வாழ்ந்து வந்தார் என்பது வளரும் அறிந்திடாத தகவல்.

இந்நிலையில், தற்போது ஒரு வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது மட்டும் இல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …