பிரபல நடிகை பிரமிதா சுபாஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான் நெனைச்சீங்க என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். அதற்கு முன்பே நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
என்றாலும் கூட சகனி திரைப்படம் தான் அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அதன் பிறகு மாஸ் என்கிற மாசிலாமணி எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட விரல்விட்டு என்னும் அளவுக்கான தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார்.
என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்ற நபரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.
மேலும் கர்ப்பம் தரித்த பிறகுதான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்ற பேச்சும் நிலவுகிறது. திருமணமான ஒன்பதாவது மாதமே குழந்தைக்கு தாயானார் அம்மணி.
திருமணம் குழந்தைகள் என பிசியாக இருந்த இவர் அடுத்த அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்கும் அளவுக்கு தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டு பிட்டாக மாறிவிட்டார்.
தற்போது ராம அவதாரம் மற்றும் நடிகர் திலீப் நடிக்கும் 148-வது படத்திலும் நடித்து வருகிறார். பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் இவர் மாசு என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் நடித்த ஒன்பதாவது எடிசன் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்று இருக்கிறார்.
சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொண்டிருக்கும் பிரணிதா கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு குனிந்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.
அதனை பார்த்து ரசிகர்கள் நீங்களும் முதல்ல அப்படித்தான நினைச்சீங்க என்று கலாய் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.