“லெமன் டீ தினமும் குடிக்கிறீர்களா..!” – அப்ப என்ன ஆகும்னு தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய தலைமுறைக்கு லெமன் டீயை குடிப்பது  என்பது அவர்களின் உணவு பழக்கவழக்கங்களில் ஒன்றாக இணைந்து விட்டது. மேலும் இந்த லெமன் டீயை நீங்கள் தினமும் குடிப்பதால் என்னென்ன ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் இந்த கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

 👍லெமனில் சிட்ரிக் அமிலம் அதிகளவு உள்ளதால் இது கல்லீரலை சுத்தப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. எனவே காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் லெமன் டீ குடிப்பதின் மூலம் கல்லீரலில் சேரும் அனைத்து விதமான கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றக் கூடிய தன்மை இந்த டீக்கு இருப்பதால் இது உங்கள் உடலை பாதுகாக்க உதவி செய்கிறது.

 👍செரிமான பிரச்சனைகள் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் லெமன் டீயை கட்டாயம் பருகுவது நல்லது. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளர்ச்சி மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். எனவே உணவு அருந்திய பிறகு ஒரு கப் லெமன் டீயை நீங்கள் பருவதின் மூலம் இந்த கஷ்டத்திலிருந்து விடுதலை பெறலாம்.

 👍சுவாச பிரச்சனைகளால் சளி மற்றும் இருமலில் நீங்கள் கஷ்டப்படும் போது லெமன் டீயை சிறிதளவு தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் உடல் வலி நீங்கி தொற்று நோய்களை எதிர்த்து போராடக் கூடிய குணத்தை கொண்ட லெமன் டீ உங்களுக்கு வழங்கும்.

👍எலுமிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நெஞ்சில் ஏற்படும் எரிச்சலை நீக்கக்கூடிய வலிமை பெற்றது.குறிப்பாக இதனை மழைக்காலத்தில் நீங்கள் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு எவ்வித தொற்றுகளும் ஏற்படாமல் உங்கள் உடலை பாதுகாக்க உதவி செய்கிறது.

👍அஸ்ட்ரிஜென்ட்  பண்புகள் லெமன் டீயில் அதிக அளவு இருப்பதால் இது உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி முகம் மற்றும் மேனிக்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய பணியை செய்கிறது. மேலும் முகப்பரு வருவதை குறைக்கிறது.

 👍சரும ஆரோக்கியத்தில் எந்த லெமன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கக்கூடிய தன்மை லெமன் டீக்கு இருப்பதால்  இதய ஆரோகத்தை மேம்படுத்த உதவி செய்கிறது. எனவே தினமும் வெதுவெதுப்பான நீரில் நீங்கள் லெமன் டீ பருகுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படாது.மேலும் உங்கள் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

👍ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் லெமன் டீயை ஒரு கப் எடுத்துக் கொள்வதின் மூலம் உடனே உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

 இது உங்கள் வாயில் இருக்கும் வீங்கிய ஈறுகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஈறு வீங்கி இருப்பவர்கள் சூடான லெமன் டீயை பருகுவதின் மூலம் வலியில் இருந்து விடுதலை அடைவதோடு வீக்கமும் நீங்கள் பெறலாம்.

👍 சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் லெமன் டீ பருகுவதின் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam