ஒருவர் கோபத்தில் அதிகமாக பேசும் போது அட வெங்காயம் என்று கூறுவது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட இந்த வெங்காயத்தில் அதுவும் குறிப்பாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறதாம்.
மேலும் சமையல் அறையில் ராணியாக இருக்கும் இந்த வெங்காயம் எல்லா உணவு பண்டங்களிலும் சேர்க்கப்படக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. உணவுக்கு சுவையை அதிகரித்து தருவதில் எந்த சின்ன வெங்காயத்தின் பங்கு பெரும் அளவு உள்ளது.
அப்படிப்பட்ட சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
வெங்காயத்தில் இருக்கும் புரதச்சத்துக்கள், தாதுப்புகள், வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க வல்லது. இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது நமது வாய்ப்புண் மற்றும் கண் வலி குணமாகும். இதற்குக் காரணம் இதில் அதிக அளவு ரிபோபிளவின் என்ற வைட்டமின் பி அதிகம் உள்ளது தான்.
இந்த பச்சை வெங்காயத்தை நீங்கள் வதக்கி சாப்பிட்டுவதை விட பச்சையாக சாப்பிடும் போது முழுமையான ஊட்டச்சத்து உங்களுக்கு கிடைக்கிறது.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் துர்நாற்றம் ஏற்படும். அதை பற்றி நீங்கள் கவலைப்படாமல் அதை பச்சையாக சாப்பிடுங்கள். உங்கள் வாயில் போட்டு மெல்லும் போது புதினாவை சேர்த்து சாப்பிட துர்நாற்றம் ஓடிவிடும்.
சிறுநீரகப் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு இந்த சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதின் மூலம் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
இந்த பச்சை வெங்காயத்தில் காணப்படக்கூடிய பிளேவனாய்டுகள் மற்றும் தியோசல்பினேட்டுகள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு ரத்தத்தின் தன்மையை சீராக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.
இதன் காரணமாக பக்கவாதம் மாரடைப்பு போன்ற நோய்கள் இருந்து உங்களை பக்குவமாக பாதுகாக்கும் பணியை எந்த சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய எந்த வேதிப்பொருட்கள் செய்கிறது.
ரத்த நாளங்களில் ரத்த உறைவு ஏற்பட்டு ஏற்படக்கூடிய நெஞ்சுவலியை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த சின்ன வெங்காயத்தை இருக்கக்கூடிய வேதி பொருளுக்கு உண்டு. எனவே நீங்கள் கட்டாயம் தினமும் இரண்டு பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது.
மேலும் சின்ன வெங்காயத்தில் 25.3 மில்லி கிராம் அளவு கால்சியம் உள்ளதால் நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும்போது மூலம் உங்களுக்கு வலுவான எலும்புகள் கிடைக்க இந்த சின்ன வெங்காயம் உதவி செய்கிறது.
அது மட்டுமல்ல பச்சை வெங்காயத்தில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்களுக்கு உதவி செய்கிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் இது கொண்டுள்ளதால் கட்டாயம் உணவில் பச்சை வெங்காயத்தை நீங்கள் சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகளும் அலர்ஜியால் பிரச்சனை படுபவர்களும் இந்த வெங்காயத்தை கட்டாயமாக சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வைட்டமின் ஏ செலினியம் போன்றவை அதிகளவு வெங்காயத்தில் உள்ளதால் இந்த வெங்காயம் உங்கள் கண்களின் பார்வையை அதிகரிக்க உதவி செய்கிறது.
பல்வலி இருப்பவர்கள் வெங்காயத்தை வலி இருக்கக்கூடிய இடத்தில் வைத்து இரவு தூங்கும் போது வைத்துவிட்டு மறுநாள் காலை எடுக்கும் போது பல்லில் இருக்கக்கூடிய புழுக்கள் வெளியே வந்துவிடும்.
ஆண்களின் விரைப்புத்தன்மை பிரச்சனைக்கு மிக நல்ல தீர்வாக இருக்கக்கூடிய இந்த சின்ன வெங்காயம் ஆண்களின் ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க உதவி செய்வதாக ஆய்வுகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரத்தசோகை பிரச்சனை காரணமாக சிரமப்படுபவர்கள் அனைவரும் வெங்காயத்தை எடுத்துக் கொள்வதின் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து எளிதில் கிடைக்கும். மேலும் வெங்காயத்தை உண்பதால் தலைவலி முழங்கால் வலி பார்வை மங்குதல் போன்ற நோய்களிலிருந்து நிரந்தர தீர்வு காண முடியும்.