“இனிமே முகத்துக்கு இப்படி நெய் தடவுங்க..!” ஹாலிவுட் ஸ்டாரா மின்னுங்க..!

இந்த உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளுமே தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில்  தீவிரமாக இருக்கிறார்கள் என்றால் அது உண்மைதான். அதிலும் தன் முக அழகை மேம்படுத்தி காட்ட என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனை வழிகளையும் ஃபாலோ செய்து அவர்கள் என்றும் இளமையானவர்கள் போல தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது சமையலுக்கு நாம் பயன்படுத்தக்கூடிய நெய்யை நமது சருமத்திற்கு அழகு கூட்ட இப்படியெல்லாம் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் இதனை படித்து நீங்களும் உங்கள் சருமத்தை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

நெய்யினால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் தினமும் நெய்யை உங்கள் முகத்திற்கு பூசி வருவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வறண்ட சருமமாக இருப்பவர்களுக்கு வறண்ட சருமத்தை நீக்கி நார்மல் சருமத்திற்கு உங்கள் சருமத்தை கொண்டு வந்து விடுகிறது.

 இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கைகளில் ஒரு துளி நெய்யை விட்டு உங்கள் முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்தவாறு அப்ளை பண்ணி விடுங்கள். உங்களது சருமம் எந்த நெய்யை உறிஞ்சி கொண்டு ஈரப்பதமாக எப்போதும் இருக்கும். இதனால் வறட்சி ஏற்படாது.

 இது மட்டும் அல்ல முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்கக்கூடிய தன்மை கொண்டது. எனவே முகச்சுருக்கங்கள் நீங்க வேண்டும் என்றால் நெய் சில சொட்டுக்கள்  உங்கள் கைகளில் விட்டு பின் அதை முகத்தில் தேய்த்து விடுங்கள்.

 நெய்யில் இருக்க கூடிய வைட்டமின் ஈ சத்தானது உங்கள் சருமத்தை மேலும் அழகாக காட்ட உதவி செய்யும். நீங்கள் குளிக்க செல்வதற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது போல உங்கள் குளியல் அறை சோப்பு அல்லது நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயோடு இணைந்து இரண்டு மூன்று சொட்டுக்கள் நெய்யினையும் விட்டு தேய்த்து குளிப்பதின் மூலம் நீங்கள் பிரஷ்ஷாக இருப்பதோடு உங்கள் சருமம் பளபளப்பாகும்.

மேலும் உங்கள் சருமம் பொலிவிழந்து காணப்பட்டால் இதை பற்றி கவலைப்பட வேண்டாம். நெய்யை தடவி நல்ல மசாஜ் செய்தாலே போதும் முகம் புத்துணர்ச்சியோடு காட்சி தரும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்கக்கூடிய ஆற்றல் என் நெய்க்கு உள்ளதால் அதை தொடர்ந்து தடவி நீங்கள் உங்கள் கருவளையத்தை நீக்கிவிடலாம்.

உங்கள் உதடு வறண்டு வெடித்திருந்தால் டோன்ட் ஓரி சில சொட்டு நெய்யை எடுத்து உதட்டில் தேய்த்து விடுங்கள். அதனை தேய்ப்பதின் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் உதட்டில் இருக்கக்கூடிய கருப்பு நிறம் மாறி சிவப்பாக மாறிவிடும். மேலும் உங்கள் உதடு பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை தரும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam