இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2023 சனிக்கிழமை. மூன்று வகையான பாத்திரங்களை உள்ளடக்கிய இந்த ஜோதிட சாஸ்திரமானது தர்மசாஸ்திரம் க்ருஹ்ய சாஸ்திரம் ஸ்ரௌத  சாஸ்திரங்களின் கீழ் வருகிறது மேலும் இந்த ஜோதிடம் வேதத்தின் ஐந்தாவது அங்கமாக கூறப்பட்டுள்ளது ஜோதிடம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை அதாவது ஜோதியைப் பற்றி விளக்குவது ஜோதி என்றால் ஒளி என்று பொருள்.

நமக்கு வேண்டிய சக்தியை அளிப்பது எந்த ஒளி தான் நட்சத்திரம் என்பது ஒளியை உன்னிலும் கோல் அதுவே கிரகம் என்றால் நட்சத்திர ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் கோள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இந்த நட்சத்திரங்களும் கிரகங்களும் ஒளியால் மாற்றம் அடைகிறது இந்த உலகில் உள்ள காற்றை சுவாசிகளின் மூலம் நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் புதை பிடிக்கும் ஒளியின் சக்தி நம்மை வந்து சேர்கிறது இந்த ஒளியின் சக்தியை கொண்டு நாம் இயங்குகிறோம் வேதத்தின் கண் போன்ற ஜோதிடத்தில் மூன்று பிரிவுகள் உள்ளது. அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாள் உங்கள் செயல்களை குறித்த நேரத்துக்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மேம்பட்டு காணப்படும். சாதகமான நிகழ்வுகள் இன்று அதிக அளவு உங்களுக்கு நடக்கும்.

 தொழிற்ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும். இதன் மூலம் உங்கள் பணியின் சிறப்பாக அமையும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை முதலீடுகளில் புதிய முதலீடுகளை செய்ய முயற்சி செய்வீர்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். பொறுப்புக்கள் அதிகரிக்க கூடிய நாள்.

இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள் நல்ல உணவு முறை ஆரோக்கியத்தை சிறப்பாக தக்க வைத்துக்கொள்ள உதவி செய்யும். கை, கால்களில் வலி வர வாய்ப்புள்ளதால் உடற்பயிற்சி செய்யவும்.

ரிஷபம்

இன்று வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய ரிஷப ராசி நேயர்களே நீங்கள் வெளியிடம் செய்வதின் மூலம் உங்களுக்கு ஆறுதலாகவும் உதவிகரமாகவும் அந்த நிகழ்வு இருக்கும். யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு யோகம் அடிக்கும். தியானத்தின் மூலம் அமைதியை நாடுவது சிறப்பாக இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று கவனத்தோடு பணியாற்ற வேண்டும். உங்களை பாராட்டி கொள்ளக்கூடிய வகையில் நீங்கள் பணியாற்றுவீர்கள். பணியில் தவறுகள் நடப்பது குறைவாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை செலவு அதிகம் செய்ய வேண்டி இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. எந்த விஷயத்திற்கு எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை சாதுரியமாக முடிவு எடுங்கள்.

உண்ணும் உணவில் கவனம் தேவை குளிர்ச்சியான உணவை உட்கொண்டால் தொண்டை வலி ஏற்படும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று பலன்கள் கலந்து உங்களுக்கு காணப்படுவதால் மனதில் தெளிவோடு இருக்க வேண்டும். வருவதை எதிர்கொண்டு தைரியமாக செயல்படுங்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு அது ஆறுதலை கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலை பளு கூடுதலாக இருப்பதால் சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். பணிகளை குறித்து நேரத்தில் முடிப்பீர்கள். இந்த நாள் தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு சிறப்பான நாளாக உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி நல்ல முறையில் சேமிப்பை உயரக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக  செலவு செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் தொடர்பான வியாதிகள் ஏற்படலாம் எனவே உணவு விஷயத்தில் கட்டாயம் கவனத்தை செலுத்தவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று தியானம் அல்லது பிராத்தனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது. இதன் மூலம் உங்கள் எதிர்மறை எண்ணங்களை தூக்கி வெளியே வீசலாம். மேலும் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்க நீங்கள் அமைதியான முறையில் தியானத்தை மேற்கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை நேர மேலாண்மையின் மூலம் இன்று அதிக அளவு வெற்றியைக் குவிப்பீர்கள். எதையும் சிறப்பாக திட்டமிட்டு செய்வதின் மூலம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருப்பதால் சற்று சுமையாக உணர்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு அதிகமாக இருக்காது என்றாலும் பணத்தை சிறப்பான முறையில் கையாண்டு தேவைகளுக்கு ஏற்ப செலவுகளை செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உடல்நலையில் பாதிப்பு தென்பட்டால் உடனடியாக மருத்துவர் ஆலோசிப்பது மிகவும் சிறந்தது. பற்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். கை கால்களில் வலி வந்து நீங்கும். கண் எரிச்சல் வர வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

சிம்மம்

 சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும் முறையாக திட்டமிட்டு செய்வதின் மூலம் நல்ல வளர்ச்சியை காண முடியும். உங்களுடைய ஆற்றலும் உறுதியும் மேலும் தீர்க்கும் முக்கிய முடிவுகளை என்று நீங்கள் எடுக்கலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை நிறைவாக முடிப்பீர்கள். உங்களிடம் நம்பிக்கையான அணுகுமுறை காணப்படும். இது உங்கள் பணிகளில் மிகச் சிறப்பாக வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை அதிகமாக சம்பாதிக்கும் திறமை உங்களிடம் ஏற்படும். இதன் மூலம் சுதந்திரமான நிதி நிலைமையை சுயசார்பையும் நீங்கள் அடைய முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் நேர்மறை எண்ணம் அதிக அளவு காணப்படுவதால் ஆரோக்கியத்தில் எந்த சுணக்கமும் இருக்காது. எனவே அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

 கன்னி ராசி நேயர்களே என்ற ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு சிறந்த பயன் தரும். யோகா மற்றும் தியான மேற்கொள்வதின் மூலம் எண்ணற்ற வெற்றிகளை பெற முடியும். உங்கள் மனமானது மகிழ்ச்சிகரமான நிலையில் இன்று இருப்பதால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று பணிகள் அதிக அளவு இருப்பதாக உணர்வீர்கள். புதிய யுத்திகளை கையாண்டு பணிகளை கவனத்தோடு முடிப்பீர்கள். இன்றைய செயல்களை உங்கள் கட்டுப்பாட்டில் நீங்கள் வைத்துக் கொண்டு தொழிலில் நல்ல விதமாக வளர்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளை முடிந்த அளவில் கட்டுப்படுத்தி கையில் இருக்கும் பணத்தை சேமிப்பது சாலச் சிறந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்கள் மட்டும் பற்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதற்கு தடைகள் பல வந்தாலும் மன தைரியத்தோடு நீங்கள் அதைக் கடந்து வந்து வெற்றியை பெறுவீர்கள். நீங்கள் செல்லும் பாதை கடினமாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அமைதியாக இருப்பதின் மூலம் வெற்றிகளை பெற முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கடின உழைப்பு இன்று உங்களுக்கு வெற்றியைத் தரும் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள். வேலை அதிகமாக இருப்பதால் அதை திட்டம் போட்டு செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சாதாரணமாக செய்யும் செலவை காட்டிலும் இன்று கூடுதல் செலவுகள் அதிகரிக்கும் நாள் என்பதால் செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்து பாருங்கள்.

 ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை அஜாக்கதையாக இருந்தால் உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படலாம். கால்வலி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே என்று ஆன்மீக விழிப்புணர்வு உங்களிடம் அதிகரித்து காணப்படும். இதன் மூலம் அமைதியான எண்ணமும் தெளிவான நடவடிக்கையும் மேலோங்கும். உங்கள் வெற்றிக்கு இதுவே காரணமாக அமையும். இந்த நாளை சிறப்பான நாளாக இது மாற்றிவிடும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அன்றாட பணிகளை கூட இன்று கவனத்தோடு கையாள வேண்டும். பணிகள் சிறிதாக இருந்தாலும் நீங்கள் பதற்றத்தோடு இருந்தால் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பதட்டப்படாமல் அமைதியாக உங்கள் தொழிலை செய்யவும்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பொறுப்புக்கள் அதிகரிப்பதின் காரணமாக பல செலவுகள் அதிகமாக ஏற்படும். இதை சமாளிக்க வேண்டுமே என்ற கவலை உங்களுக்கு வரும். எனவே வரவு மற்றும் செலவை கண்காணிப்பது சிறப்பாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டப்படக்கூடாது. தேவைப்படும்போது ஓய்வெடுக்க தவறாதீர்கள். கட்டுப்பாடு தேவை. அதிகம் பதட்டப்படாமல் இருந்தால் கால் வலி போன்றவை ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிநேயர்களே  இன்று இறை வழிபாடு மற்றும் ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வர பிரசாதமாக இருக்கும். சுய முன்னேற்றத்திற்காக கட்டுப்பாடுகளை நீங்கள் வகுத்து விடுவீர்கள். விரும்பியதை அடைய தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நிதியை பொறுத்தவரை இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் வந்து சேரும். இது உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அள்ளிக் கொடுக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று திருப்திகரமான நாளாக இருக்கும். உங்களிடம் அதிக பணம் இருப்பதால் அதை பயனுள்ள  விஷயத்திற்காக செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உடல் முழு ஆரோக்கியமாக இருக்கும்.உங்களிடம் காணப்படும் ஒரு வகை  மனதிடம் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் எந்த குறையும் ஏற்படாது.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருப்பதால் இந்த நாள் எடுக்கின்ற காரியங்கள் அனைத்திலும் வெற்றி வந்து சேரும் என்பதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் இனிமையாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இதன் காரணமாக உங்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுதலும் நீங்கள் பணியாற்றுவீர்கள்.

 இன்று நிதி நிலைமை பொறுத்த வரை சிறப்பான நாளாக உள்ளது. அதிக அளவு பணத்தை சம்பாதிப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் மட்டுமல்லாமல் சேமிப்பும் என்று உயரக்கூடிய உன்னத நாளாக விளங்குகிறது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன மகிழ்ச்சியின் காரணமாக உங்களுக்கு ஆரோக்கியத்தில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே உங்கள் சுற்றி இருப்பவர்களோடு ஒத்து செல்லுங்கள். இன்று ஏழைகளுக்கு தேவையான உணவு அல்லது பணத்தை கொடுத்து மகிழுங்கள். இன்றைய நாளை நல்ல முறையில் கழிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் பொறுமை அவசியம் தேவை. அமைதியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். தொழிலில் தீவிரமாக கவனத்தை செலுத்த வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை சேமிப்பது முதன்மையானது.  எதிர்காலத்திற்காக நீங்கள் பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். நிதியை கையாளுவதில் உங்களிடம் திறமை இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அமைதியாக இருக்கவும். தியானம் மேற்கொள்ளவும் இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள்.  இந்த அணுகுமுறையை மேற்கொள்வது தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதையும் விரைவாக முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதின் மூலம் விஷயங்களை எளிதாக கையாளலாம்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருப்பது போல் உணர்வீர்கள். எதையும் மனதில் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள். விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவதை பற்றி சிந்திக்கவும்.

 பண விஷயத்தில் பொறுமை தேவை. சரியான நேரத்தில் உங்களுக்கு பணம் கிடைக்கும். பண விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதால் எந்த பலனும் இல்லை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை திரவ உணவுகளை குறிப்பாக நீர் மட்டும் எலுமிச்சை சாறு உட்கொள்வது நல்லது. இது வயிற்று வலியை குறைக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனத்தில் செலுத்துங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …