“பீஸ்ட்” – இணையத்தில் லீக் ஆன காட்சிகள்..! – படக்குழுவினர் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட் ( Beast ). இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவம் தயாரித்து வருகிறது. படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

கடந்த பிப்.14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் பிரபலங்கள் மத்தியிலும் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சமந்தா உள்ளிட்டோர் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி இணையதளங்களில் விடியோ பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியான 12 நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

இதற்கு முன் ரவுடி பேபி பாடல் 18 நாட்களில் இந்த சாதனையை படைத்தது. தற்போது அந்த சாதனையை அரபிக் குத்து பாடல் முறியடித்துள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நிலைமை இப்படி இருக்க, பீஸ்ட் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இது படக்குழுவினர் மட்டுமில்லாமல், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே பாடல், டீசர், ட்ரெய்லர் என லீக் ஆவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான் என்றாலும், இந்த முறை படத்தின் காட்சிகளே லீக் ஆகியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. மேலும், டப்பிங் பணிகள் நடைபெற்று வருதால் அங்கிருந்தான் இந்த காட்சிகள் லீக் ஆகியிருக்க வாய்ப்பு உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *