” அட இத்தனை பெயர்களாக சிரஞ்சீவி ஆஞ்சநேயர்-ருக்கு..!” – தெரிந்து கொள்ள படித்துப் பாருங்க..!

வாயுபுத்திரர் ஆன அனுமானுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியான பெயர்கள் அழைக்கப்படுகிறார். எண்ணற்ற ஆற்றல்களை கொண்ட இந்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ராம தூதராக வந்து அனைவரையும் பாதுகாத்து நின்றவர்.

 தமிழ்நாட்டில் இவரை ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் திருமாலின் அவதாரமான ராம அவதாரத்தில் ராமனுக்கு பக்கபலமாக நின்றதால் ஆஞ்சநேய மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

 கர்நாடகத்திலோ அனுமந்தையா என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய ஆஞ்சநேயர் ஆந்திராவில் ஆஞ்சநேயிலு என்றும் சஞ்சீவையா என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

 ராவணனுக்கும் ராமனுக்கும் போர் நடக்கும் போது சஞ்சீவி மலையை அப்படியே அலகா தூக்கி வந்ததால் இவரை சஞ்சீவையா என்று அன்போடு அழைக்கிறார்கள்.

 மகாராஷ்டிரத்தில் மாருதி என்றும் மகாவீர் என்றும் சோனி என்றும் அழைக்கப்படக்கூடிய இவர் மாருதி பிஹாரி என்று உத்தரப்பிரதேச மாவட்டத்தில் அழைக்கப்படுகிறார். அனுமனின் தாயார் அர்ச்சனா தேவி அதனால் இவரை அஞ்சனை புதல்வன் என்றும் அழைக்கிறார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்த அனுமான் ராம பக்தராக விளங்கி இருக்கிறார்.மேலும் வட இந்தியாவில் ஹனுமானை சிவனின் அவதாரமாக கருதுகிறார்கள். இவருக்கு வைணவ திருக்கோயிலில் தனி, சன்னிதானம் உண்டு.

 வால்மீகி முனிவர் தான் எழுதிய ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் அனுமானின் பெருமையை முழுவதும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

 மேலும் அனுமன் என்ற சொல்லின் பொருளே செல்வன் என்பதுதான் என்று பல இடங்களில் அவர் சித்தரித்திருக்கிறார். கர்ப்பிணி பெண்கள் ஹனுமன் சைலஜாவை படிப்பதின் மூலமும் அனுமனின் வரலாற்றை தெரிந்து கொள்வதின் மூலமும் அவர்கள் வயிற்றில் இருக்கும் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளருவதோடு வீரர்களாக வளருவார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த அனுமாருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தி வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் எனில் வெற்றிகளை மாலை சாத்துங்கள்.

 அதுமட்டுமல்லாமல் வடை மாலை அனுமாருக்கு சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. சனிக்கிழமை அன்று அனுமனை வணங்குவது உங்களுக்கு நல்ல சிறப்புகளை கொடுக்கும்.இந்தியா முழுவதும் அனுமத் ஜெயந்தி சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …