ண்னோவ்..! தலைய சீவுனா..! – சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்..! – தீயாய் பரவும் புகைப்படம் இதோ..!

தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரும் டைரக்டராக உருவாக்கி இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் மாநகரம் என்ற திரைப்படத்தை முதலில் இயக்கினார்.அதற்குப் பிறகு சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார் இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது .

முக்கியமாக இதுவரை வந்த தமிழ் சினிமா திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தது இப்படத்தில் ஹீரோயின் இல்லை டூயட் பாடல் இல்லை.

மேலும் இப்படத்தில் பல சிறு சிறு கேரக்டரையே வைத்திருந்தார். அதிலும் முக்கியமாக பெரிய நடிகர்கள் யாரும் அந்த அளவுக்கு இந்த படத்தில் இல்லை. இருந்தபோதிலும் இந்தப் படம் சக்கை போடு போட்டது அதற்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலை பெற்று பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது .

இதன் பிறகு ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களை எல் சி யு என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். தற்பொழுது அடுத்தகட்டமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யை வைத்து லியோ என்ற ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

இந்த படத்தில் ஒரு மிகப் பெரும் நடிகர் பட்டாளமே இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது . நடிகை திரிஷா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்கிறார்.மேலும் வில்லன்களாக கௌதம்மேனன் அர்ஜுன் ,மிஷ்கின், சஞ்சய்தத் என மிகப்பெரிய பட்டாளமே நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிக்பாஸ் புகழ் ஜனனி, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாண்டி மாஸ்டர் நடிகை பிரியா ஆனந்த் , தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

படத்தின் டைட்டில் டீஸர் ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியான போதே இந்தப் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் பெறும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார்கள். தற்பொழுது முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் சந்தித்திருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும்போது சஞ்சய் தத்தின் காட்சிகள் தற்போது படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தற்பொழுது படப்பிடிப்பு காஷ்மீரில் வைத்து நடைபெற்று வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஸ்கின் தன்னுடைய படப்பிடிப்பு முடிந்ததாகவும் லோகேஷ் நன்றாக படத்தை இயக்குகிறார் எனற்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் .

இதுபோலப் பல சினிமா அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …