சினிமா விமர்சனம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒரே ஒரு முகம் தான். அனைத்து ரசிகர்களும் இவருடைய தவிர்க்கத்தான் காத்துக்கிடக்கிறார்கள் அதுபோக சினிமா பிரபலங்கள் கூட இவரது விமர்சனத்தை பார்க்காமல் இருப்பதில்லை அந்த அளவிற்கு பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.
இவர் யாருடைய படம் வந்தாலும் சரி அதை விடமாட்டார் அதிலும் முக்கியமாக விவேகம் படத்தில் ஆரம்பித்த இந்த சம்பவம் தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது . விஜய் அஜித் ரஜினி என யார் படங்கள் வந்தாலும் அந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் ஆகவே கொடுப்பதில் இவர் வல்லவர்.
மேலும் சில சமயங்கள் இவரது ரிவியூ வில் எதிர்ப்புகள் எழுவது வழக்கம் யார் கூறினாலும் அந்த பெரிய நடிகர்களின் ரசிகர்கள் இவர்களை திட்டினாலும் கூட இவருடைய ரிவியூவை ரசிகர்கள் பார்ப்பார்கள்.
அந்த அளவிற்கு இவருடைய ரிவ்யூ நக்கலும் நையாண்டியும் கலந்ததாக இருக்கும் தற்பொழுது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள அகிலன் திரைப்படத்தையும் இவர் விட்டு வைக்கவில்லை.
இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அனைவருமே நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தார்கள். முக்கியமாக இந்த படத்தில் சாமானியர்களுக்கு ஆன கதை என்று கூறப்பட்டிருந்தது . ஆனால் அப்படி ஒன்றும் இருப்பதாக இந்த படத்தில் தெரியவில்லை, அகிலன் படத்தில் துறைமுகம் கண்டைனர் போன்ற காட்சிகள் தான் மீண்டும் மீண்டும் வருவதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு கலாய்த்து தள்ளியுள்ளார்.
இந்த ரிவ்யூ வில் ஜெயம்ரவியை என்னதான் மாஸாக காட்ட வேண்டும் என்று இயக்குனர்கள் முயற்சி செய்தாலும் குளோசப் காட்சியில் பார்க்கும்பொழுது அமுல்பேபி என்றுதான் தோன்றுகிறது என சட்டை மாறன் கிண்டலடித்து தள்ளியுள்ளார்.
மேலும் திரைப்படம் என வந்துவிட்டால் குறைந்தது 60 சீன்களாவது இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு சீனே 15 நிமிடம் வருகிறது இந்தப்படம் அந்த அளவிற்கு கழுத்தை அறுக்கிறார்கள்.
இதே நிலையில் ரசிகர்களும் அகிலன் திரைப்படத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தியேட்டரில் பார்க்க முடியவில்லை எனவும் கூறி வருகிறார்கள் எது எப்படியோ ப்ளூ சட்டை மாறன் என்ற கருத்து இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.