இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023 புதன்கிழமை. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் அவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கிரகங்களின் அமைப்பை பொறுத்து ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலை அமைந்திருக்கும் அதன் அடிப்படையில் தான் ஒவ்வொருவருக்கும் ராசி மற்றும் அதில் இருக்கும் நட்சத்திரம் என்ன என்பதை ஜோதிடர்கள் குறிப்பெழுதி ஜாதகமாக கொடுப்பார்கள். அதனைக் கொண்டுதான் அவர்களின் முழு தசா புக்தி நியமிக்கப்படுகிறது இதன் அடிப்படையில் தான் அவர்களின் எதிர்கால பலன்கள் அமையும்.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியோடும் பொறுமையோடும் செயல்பட்டால் மட்டும் தான் வெற்றிகளை உங்களது ஆக்கிக் கொள்ள முடியும். எனவே பொறுமையோடு எதிர்காலத்திற்காக திட்டமிடுங்கள் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் அதிகப்படியான சுமைகள் உங்களுக்கு இருப்பதால் பணிகளை முறையாக முடிக்க முடியாது. எனவே ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வது மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே காணப்படுகிறது. எனவே தேவையற்ற செலவுகளை குறைத்து விடுங்கள். இல்லையெனில் உங்கள் பண இருப்பு கணிசமான அளவு குறைந்து விடும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்பட்டு அதனால் உங்களுக்கு கவலை ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றியை மிக எளிதில் அடையக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது. தன்னம்பிக்கையோடு இருக்கும் நீங்கள் எதையும் செவ்வனே செய்து  பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் திறமை தானாக வெளிப்படும். உங்களுடைய திறமைக்கு ஏற்ப உங்களுக்கு அனைத்தும் நடக்க கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகளவு இருப்பதால் எதிர்பாராத வரவு காரணமாக மகிழ்ச்சி ஏற்படும். எனவே நிதி நிலைமையை பற்றி கவலை தேவையில்லை.

ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதுமில்லை என்றாலும் நீங்கள் உணவு முறையில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தேவையில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதன் மூலம் ஆரோக்கியம் பாதிப்பாகும் என்பதை உணர்ந்து உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்கவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களிடம் நம்பிக்கை அதிக அளவு காணப்படும். இதன் மூலம் நீங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு உரிய வெற்றிகள் வந்து சேரும். மனநிலையில் உறுதி அதிகரிக்கும். எனவே இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை எளிதாக முடிப்பீர்கள் .புதிய பணி வாய்ப்புகள் வந்து சேரும் உங்கள் திறமையை கட்டாயம் வெளிப்படுத்தக்கூடிய நிலையை உணர்ந்து அதற்கு தக்கவாறு செயல்பட்டு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று மிகவும் சிறப்பான நாளாக உள்ளது. உங்களின் பணவரவு அதிகரித்து இருப்பதின் காரணமாக சேமிப்பு உயரக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் சிறப்பாக உள்ளது. எனினும் நீங்கள் எண்ணெய் பண்டங்களை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பதின் மூலம் தோல் பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று பாதுகாப்பு இன்மை உணர்வு உங்களிடம் அதிகரித்து காணப்படுவதால் மகிழ்ச்சி அந்த அளவு இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடப்பதில் சற்று தாமதமாகும். எனினும் உங்கள் மனநிலையில் ஒரு விதமான திருப்தி இருப்பதால் இந்த நாள் எந்த வகையிலும் உங்களுக்கு தடங்கல்களை ஏற்படுத்தித் தராது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. சக பணியாளர்களுடன் உறவில் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் அவர்களுடன் பழகும் போது கவனத்தோடு இருப்பதில் மிகவும் நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் அதிகரித்து இருக்கக்கூடிய நாளாக உள்ளதால் உங்கள் வரவு செலவுகளை கையாளுவதில் சற்று மந்தமான சூழ்நிலை நிலவும். பண இழப்பை தவிர்க்க முறையாக திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி மற்றும் சின்ன சின்ன உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிக பொறுப்புக்கள் காரணமாக தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே என்று பல சிக்கல்கள் நிறைந்த நாளாக இந்த நாள் உள்ளதால் எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.வீண் வாக்குவாதம் மற்றும் வதந்திகளில் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் அவற்றில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு நன்மையை தரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடச் சூழல் சற்று கடினமாக இருப்பதால் பொறுப்புக்கள் அதிகரித்து கூடுதல் பணி சுமை ஏற்படும். எனவே பொறுமையாக அதனை பார்க்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி சம்பந்தமான முடிவுகளை இன்று எடுக்காமல் தள்ளி போடுவது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

 தேக ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால் நீங்கள் யோகா மற்றும் தியான பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று இலக்குகளை அடைவதற்கு உரிய நாள் என்பதால் இந்த நாளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் இன்று உங்களுக்கு வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கொடுக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் திறம்பட விரைவாக முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பணியிட சூழலும் மிகச் சிறப்பாக உள்ளது.

 நிதியை பொறுத்தவரை இன்று முன்னேற்றகரமான நாளாக இருப்பதால் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்கள் சேமிப்பை உயர்த்த என்ன செய்யலாம் என்று திட்டங்களை தீட்ட கூடிய நாள் இந்த நாள் தான்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆற்றல் அதிக அளவு இன்று இருப்பதால் உங்கள் தேக ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று முக்கியமான செயல்களை முடித்து விட வேண்டும் என்று மனதால் நினைத்தாலும் அவற்றை முடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடுவதின் மூலம் மட்டும்தான் வெற்றி அடைய முடியும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் ஆழ்ந்து ஈடுபடக் கூடிய நீங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சூழ்நிலைக்கு தக்கவாறு வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்து நீங்கள் நடந்தால் இந்த நாளை உங்களுக்கு உரிய நாளாக மாற்றி விடலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவும் செலவும் சரியாக இருக்கும். எனவே நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை என்று தான் கூற வேண்டும். மேலும் பணம் சேர்ப்பதற்கு போராட வேண்டி இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அமைதியாக இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. சோம்பலோடு இருக்கும் நீங்கள் தியான பயிற்சியை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்க்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை ஏதும் ஏற்படாது. பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகள் அனைத்தையும் நீங்கள் திட்டமிட்டு தான் முடிக்க வேண்டி இருக்கும். மூத்தோர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடப்பதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவும் செலவும் சேர்ந்தே இருக்கும். உங்கள் குடும்பத்திற்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். எனவே நிதி நிலைமையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆரோக்கியத்தில் அதிக அளவு கவனத்தை காட்டுவது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அஜீரண கோளாறால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நிச்சயமற்ற தன்மையை போல இருப்பதாக நீங்கள் உணர்வுவதால் எந்த முயற்சிகளிலும் உங்களுக்கு நல்ல பலன் மற்றும் தீய பலன் கிடைக்கப் போவதில்லை. இவை இரண்டும் கலந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் அமைதியாக இருப்பதை தவிர வேறு வழியே இல்லை.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் கவனம் குறைந்து இருப்பதால் கவனத்தோடு பணியாற்றுவது மிகவும் அவசியமான ஒன்று இல்லை என்றால் உங்கள் பணி பாதிப்படையும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு செலவுகள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் எதிர்காலத்தை கருதி நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிக்க உகந்த நாள் இந்த நாள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் மன அமைதியைப் பெற்று முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமானது.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று அனைத்தும் சமூகமாக நடக்கக்கூடிய நாளாக உள்ளது நம்பிக்கை உணர்வை உங்களிடம் அதிகமாக வைத்துக் கொண்டீர்கள் என்றால் வெற்றிப் பாதையை நோக்கி நீங்கள் நடந்து செல்லலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை இன்று பணியில் மிகவும் சிறப்பாக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் திறமைகள் பளிச்சென்று வெளிவரும் அதே சமயத்தில் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை கண்டறியக்கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிக அளவு காணப்படும். நிதியை சுதந்திரமாக கையாளுவீர்கள். எனவே உங்களுக்கு நிதி பற்றி எந்தவிதமான அச்சமும் தேவையில்லை. அது திருப்திகரமான நிலையில் தான்  உள்ளது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாள் என்று கூறலாம். இன்று உங்களிடம் ஆற்றல் அதிகரித்து காணப்படுவதால் ஆரோக்கியத்தில் சுணக்கம் இல்லை.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் மனதில் சில இலக்குகளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பீர்கள். அதை அடைவதற்கான முயற்சிகள் இறங்கி செயலாற்றக்கூடிய அற்புதமான நாளாக இந்த நாள் உள்ளது. எதையும் எளிய வழியில் உங்களால் அடைய முடியும். பயணத்தின் மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிட்டும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும் உங்கள் திறமையை பார்த்து மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். பணிகளை உற்சாகமாக மேற்கொண்டு பல அபரிமிதமான செயல்களை இன்று செய்வீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சிகரமான நாளான இன்று கூடுதல் ஊக்கத்தொகை சலுகைகள் கிடைக்கக்கூடிய நாளாக இருப்பதால் உங்கள் கையிருப்பு உயரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிக அதிக ஆற்றலும் சுறுசுறுப்பும் இருப்பதால் தேக ஆற்றலை பற்றி கவலைப்பட வேண்டாம். அற்புதமான நாளாக இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு வெற்றி கிட்ட கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எப்போதும் உறுதியோடு இருக்கும் நீங்கள் இன்று வெற்றிகளை வாரிக் குவிப்பீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை வேலை நிமித்தமாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இறுக்கமான பணி மற்றும் பணிச்சுமைகள் காரணமாக பணியில் தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படலாம். எனவே கண்ணும் கருத்துமாக வேலையை பார்க்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் போதிய அளவு இல்லை. பொறுப்புக்கள் அதிகரிப்பதின் காரணமாக உங்களுக்கு செலவுகளும் அதிகமாகும். எனவே திட்டமிட்டு உங்கள் பணத்தை பயன்படுத்தும் போது ஓரளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பிரச்சனை வந்த உடனேயே மருத்துவர் அணுகுவது மிகவும் நல்லது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …