உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள். உப்பு உணவுக்கு சுவையை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும் வாக்குக்கு ஏற்ப உடலில் உப்பின் அதிகரிக்கும் போது எண்ணற்ற ஆபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் உப்பை எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவு மட்டும் தான் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அது பல விளைவுகளை நமது உடலுக்கு ஏற்படுத்திவிடும்.
எனினும் இந்த சோடியம் @ உப்பு நமக்கு உடலில் போதுமான அளவு கட்டாயம் இருக்க வேண்டும். சோடியமானது உடலுக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் அளவு ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவைப்படுகின்ற அளவாக உள்ளது. இதற்கு மேல் உப்பு உடலில் சேரும்போது தான் நமக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.
அதிகமான உப்பு காரணமாக ஏற்படும் பாதிப்புகள்
👍உப்பு உடலில் அதிகமாகும் போது அது செல்களுக்குள் உற்பத்தியாகின்ற நீரோடு கலந்து ரத்தத்திலும் கலந்து ரத்தத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்த நோய் நமக்கு ஏற்படுகிறது.
👍மேலும் சோடியம் அதிகரிப்பதின் காரணமாக சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற கோளாறுகளை உண்டு பண்ண கூடிய ஆற்றல் இந்த உப்புக்கு உள்ளது.
👍உப்பு உடம்பில் அதிகமாகவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவது ஒரு தசைப் பிடிப்பு, தசைவலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
👍இந்த உப்பை அதிகமாக நாம் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பில் உள்ள கால்சியத்திற்கு கரைந்து எலும்பு புற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
👍உப்பு சத்து அதிகமாகும் போது கை கால்களில் வீக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நீங்கள் தக்க முறையில் உப்பினை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
உப்பு அதிகம் இருக்கக்கூடிய ஊறுகாய் போன்ற பொருட்களை நீங்கள் குறைந்த அளவு பயன்படுத்துவது நன்மையை தரும்.
எனவே சுவைக்காக நாம் உப்பினை சேர்க்காமல் உடல் ஆரோக்கியத்திற்காக சேர்த்துக் கொள்ளும் போது நமக்கு மேற்கூறிய பாதிப்புகள் ஏதும் உடலுக்கு ஏற்படாது. எனவே அதை கருத்தில் கொண்டு நீங்கள் உப்பினை அளவோடு உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.