“அழகு கலையில் குடிக்கும் பீர்..!” – செய்யும் அற்புதங்கள்..!!

பிரபலமான ஆல்கஹால்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் பீர் உடலுக்கு நிறைய நன்மைகளை தருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் இந்த பீரானது அழகு கலையில் குறிப்பாக சருமங்களை பராமரிப்பது போன்ற மிக சிறந்த பணியை செய்து வருகிறது. பீர் குடிப்பதாலோ அல்லது அந்த பீரை அழகுக்காக பயன்படுத்துவதின் மூலம் நீங்கள் மேலும் அழகியாக மாற முடியும்.

அழகுக் கலையில் பீரின் பங்கு

அழகுக் கலையில் பீர் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பீரானது உங்கள் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கக்கூடிய சக்தி கொண்டது. எனவே ஒரு சிறிய அளவு பீரை உங்கள் சருமங்களில் தேய்த்து விட்டு குளித்து வந்தீர்கள் என்றால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.

தலைக்கு குளிக்க நீங்கள் ஷாம்புவை பயன்படுத்துவீர்கள். அப்படி ஷாம்பு போட்டு குளித்த பிறகு ஒரு சில அவுன்ஸ் பீரை உங்கள் தலைமுடியில் போட்டு அலசியதும் உங்கள் முடி பட்டுப்போல மென்மையாக மாறிவிடும். இது ஒரு மிக அற்புதமான ஹேர் கண்டிஷனராக திகழ்கிறது.

பீரைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவி வந்தீர்கள் என்றால் அது உங்கள் சருமத்தை இருக்கும் மாசு, மருக்கள் அழுக்களை நீக்கி விடக்கூடிய தன்மை கொண்டது. எனவே உங்கள் சருமம் பார்ப்பதற்கு மென்மையாகவும், வெள்ளையாகவும் காட்சியளிக்கும். மேலும் இதில் வைட்டமின் பி அதிக அளவு உள்ளதால் உங்கள் சருமம் மென்மையாகும்.

பீர் ஒரு மிகச்சிறந்த ஆன்ட்டி பாக்டீரியல் பொருள் என்பதால் முகப்பருக்களைப் போக்க நீங்கள் உங்கள் முகத்திற்கு இதை பேஸ் பேக்காக பயன்படுத்தினால் போதும் முகப்பரு தொல்லையிலிருந்து விடுதலை அடையலாம்.

முகத்தில் ஏற்படுகின்ற எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த பீருக்கு உள்ளது. இது சருமத்தில் உள்ள பிஹெச் தன்மையை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

என்றும் இளமையான தோற்றம் வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருக்கும் இந்த பீரை பயன்படுத்தி வந்தால் முதுமை தோற்றம் ஏற்படாமல் நீங்கள்  தடுக்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam