“உங்க வீட்டில முகம் பார்க்கும் கண்ணாடிய எந்த இடத்துல மாட்டுங்க ..!” – இன்பத்தோடு வாழுங்க..!

கண்ணாடி அனைத்தையும் பிரதிபலிக்கக்கூடிய தன்மை கொண்டது. இது முகத்தை பார்க்க மட்டும் பயன்படுவது இல்லை. வீட்டை அலங்கரிக்க கூடிய ஒரு முக்கியமான பொருளாகவும் திகழ்கிறது.

 வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கண்ணாடிகளை இந்த இடத்தில் வைப்பதின் மூலம் என்னென்ன நடக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.

மேலும் கண்ணாடிகளுக்கு அதிகப்படியான நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய தன்மை இருப்பதால் கண்ணாடி பெரும் தாக்கத்தை இதன் மூலம் ஏற்படுத்துகிறது.

நீங்கள் உங்கள் வீட்டில் சரியான இடத்தில் கண்ணாடி இல்லை என்றால் நிச்சயம் பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் தான் இருக்க வேண்டி இருக்கும். அந்த கண்ணாடியானது சரியான திசையில் இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கும்.

 எனவே சரியான திசையில் கண்ணாடியை நீங்கள் வைத்திருக்கிறீர்களா என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கண்ணாடி எப்போதும் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் கண்டிப்பாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் உடனடியாக அந்த கண்ணாடி வைத்திருக்கும் இடத்தை மாற்றி விடுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டில் பிரச்சனைகள் தலை விரித்து ஆடும். கணவன் மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு அடிக்கடி சண்டை நிகழும்.

அதுபோலவே உடைந்த கண்ணாடி உங்கள் வீட்டில் இருக்கக் கூடாது. அந்த கண்ணாடியில் நீங்கள் எப்போதும் முகத்தை பார்க்கக்கூடாது. எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்க கூடிய இந்த கண்ணாடியை உங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றி விடுங்கள். இல்லை என்றால் இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.

மங்கலான கண்ணாடியில் முகம் பார்ப்பதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். வாஷ்பேசின் அருகில் இருக்கக்கூடிய கண்ணாடிகளில் கரை இருந்தால் அவ்வப்போது அதை துடைத்து சுத்தம் பண்ணி விடுங்கள். இல்லை என்றால் இது எதிர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதோடு கண்ணாடி பார்ப்பவர்களின் மீது அந்த ஆற்றலை பிரயோகம் செய்துவிடும்.

எனவே கண்ணாடியை வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். இப்படி வைப்பதின் மூலம் உங்களுக்கு மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். வடக்கு திசை குபேர திசை என்பதால் கண்ணாடியை வைக்கும் போது உங்களுக்கு செல்வ செழிப்பு இரட்டிப்பாக கிடைக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam