இன்று அனேகமானவர்களின் வீட்டில் செல்லப்பிராணிகள் உள்ளது. குறிப்பாக நாய், பூனை, கோழி, லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை நாம் கூறலாம். இந்த செல்லப்பிராணிகளின் மூலம் உங்களுக்கு துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால் அதை எளிய முறையில் எப்படி சுத்தம் செய்து நறுமணத்தோடு வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி சில குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
துர்நாற்றத்தை விரட்டி அடிக்க சில டிப்ஸ்
💐உங்கள் வீட்டில் சமையல் சோடா இருந்தால் அந்த சமையல் சோடா ஒரு வினிகரையும் சேர்த்து உங்கள் செல்லப் பிராணிகள் இருக்கக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள் அல்லது அந்த இடத்தில் அப்படியே தெளித்து விடுங்கள். இதன் மூலம் துர்நாற்றம் அடிக்கக்கூடிய அந்த இடம் நறுமணத்தை பரப்பும்.
💐ஹைட்ரஜன் பெராக்ஸைட் உங்கள் வீட்டு செல்லப் பிராணியின் சிறுநீரால் ஏற்படும் துர்வாடையை அப்படியே தடுத்து விடக்கூடிய சக்தி கொண்டது. இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைட் உடன் சமையல் சோடாவை கலந்து உங்கள் செல்லப்பிராணிகள் இருக்கும் இடத்தில் தெளித்து விடுங்கள் அல்லது அப்படியே வைத்து விடுங்கள்.
💐ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழத் தோலை பொடி செய்து அதை சிறிதளவு சர்க்கரை நீரோடு சேர்த்து கொதிக்க வைத்து செல்லப்பிராணிகள் இருக்கக்கூடிய அறைகளில் தெளித்து வந்தால் பிராணிகளிடமிருந்து வரக்கூடிய வாடை நீங்கிவிடும்.
💐கடைகளில் கிடைக்கக்கூடிய நியூட்ரலைசிங் ஓடர் ரிமூவர் பயன்படுத்தி நீங்கள் அதை உங்கள் செல்லப் பிராணிகள் இருக்கக்கூடிய இடங்களில் வைத்து விடுவதின் மூலம் துர்நாற்றத்தை மிக எளிதாக தடுத்து விட முடியும்.
💐ஏதாவது நறுமணம் மிக்க எண்ணெயில் எலுமிச்சம் சாறை கலந்து சமையல் சோடாவையும் போட்டு நன்கு குலுக்கி வாடை வரும் பகுதிகளில் தெளித்து விட்டால் நறுமணம் ஏற்பட்டு துருவாடை நீங்கிவிடும்.
மேற்கூறிய இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்து உங்கள் செல்லப்பிராணி இருக்கும் இடத்தில் நறுமணத்தை பரப்பும் வகையில் செய்யுங்கள். இதன் மூலம் அந்த இடத்துக்கு நீங்கள் சென்றாலும் அந்த பிராணிகள் அங்கு இருந்தாலும் புத்துணர்வோடு இருப்பார்கள். யார் வந்தாலும் முகம் சுளிக்க மாட்டார்கள்.