இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை.இறைவன் மீது நம்பிக்கையோடு இருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரம் இல்லை. மேலும் உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டால் மென்மேலும் முன்னேற்ற பாதையில் நடை போட்டு செல்ல முடியும்.

எடுத்து இருக்கின்ற இந்த மனிதப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். முன் ஜென்மத்தில் செய்திருக்கும் கர்ம வினைகளை போக்க தக்க பரிகாரங்களை செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி நமக்கு அழகாக எடுத்து கூறும் ஜோதிடக் கலை ஒரு சிறப்பு வாய்ந்த கலையாகும்.

இதன் மூலம் நீங்கள் உங்கள் இறந்தகால, நிகழ் கால, எதிர்கால வாழ்வை கணித்து அதற்கு தக்கபடி நடக்க முடியும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் நீங்கள் இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய வாய்ப்புகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் என்று உள்ளது. இன்று நீங்கள் பணிகளை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பதால் தொழில் செய்யக்கூடிய இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாகவும் ஸ்திரமாகவும் உள்ளது. உங்கள் வங்கி இருப்பு அதிகரிப்பதை நீங்கள் பார்க்கலாம். பண சேமிப்பு அதிகரிப்பாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் மிகுந்த ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான சிக்கல்களும் இல்லை என்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று எல்லா செயல்களிலும் நீங்கள் பொறுமையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டி வரும். வாக்குவாதம் எற்பட வாய்ப்புள்ளதால் பிறரோடு பேசும்போது கவனமாக பேசுங்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதை தள்ளிப் போடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று அதிக பணிகள் காணப்படும். பணிகளை மேற்கொள்ளும் போது நீங்கள் பொறுமையாக செய்ய வேண்டும். இல்லை என்றால் பணியிடங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை அஜாக்கிரதை, கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கையாளும்போது கூடுதல் கவனத்தோடு கையாளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் தியானம் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே தியானத்தில் கவனத்தை செலுத்தவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று மந்தமான நாள் என்பதால் உங்கள் வேலைகளை கையாளுவது கடினமாக இருக்கும். கட்டுப்பாடற்ற சூழ்நிலை நிலவுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். இதை சமாளிக்க நீங்கள் உறுதியோடு செயல்படுவது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய அம்சம் ஏற்படும்.

 எனவே நீங்கள் எதிலும் உறுதியோடு செயல்பட கூடிய மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளவும் தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளைக் குறித்த நேரத்தில் உங்களால் செய்து முடிக்க முடியாது. தாமதங்கள் ஏற்படும். பணி நிலுவையில் இருப்பதால் உங்களுக்கு மன கவலை ஏற்படும் .

நிதிநிலைமையை பொறுத்தவரை பணத்தை கையாளும்போது அஜாக்கிரதையாக கையாள வேண்டி இருக்கும். எனவே கட்டாயம் நீங்கள் கட்டுப்பாடுடன் உங்கள் பணத்தை செலவு செய்யுங்கள்.

 பண வரவும் குறைவாக இருப்பதோடு பண இழப்பும் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் நிலவுகிறது ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உங்கள் பதட்டத்தை குறைத்து தியானத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை  நீங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று வெற்றிகரமான பலன்களை பெறக்கூடிய நாளாக அமைந்துள்ளது. உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற நீங்கள் முயற்சி செய்வீர்கள். கவனம் மற்றும் உறுதியோடு செயல்பட்டால் இன்று வளர்ச்சி அதிகரிக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. தன்னிச்சையாக அனைத்து பணிகளையும் நீங்களே செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமை வெளிப்பட்டு பலரால் பாராட்டுக்கள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாக உள்ளதால் உங்கள் பணத்தை சேமிக்க உயர்வீர்கள். வங்கியில் இருக்கக்கூடிய பணம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த விதமான குழப்பமும் வேண்டாம். உங்கள் மன வலிமை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாகவே உள்ளது. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வகையில் சாதகமான பலன்கள் அமைந்துள்ளது. கடினமான பணிகளை எளிதாக முடிக்கக்கூடிய சூழ்நிலை இன்று நிலவுவதால் முக்கிய முடிவுகளை நீங்கள் தாராளமாக எடுக்கலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நேர்மையுடன் பணி புரிவீர்கள். இதனால் உங்கள் திறமை மேம்படும். அனைவரும் உங்களது பணியை பார்த்து பாராட்டக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பூர்வீக சொத்து மூலம் இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கையில் உள்ள பணத்தை கொண்டு அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எனவே நிதி நிலைமையை பற்றி கவலை வேண்டாம்.

 ஆரோக்கியமும் இன்று மிகவும் சிறப்பாகவே உள்ளது. உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை உணர்வு காரணமாக ஆரோக்கியத்தில் எந்த சுணக்கமும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று எல்லா செயல்களிலும் எதார்த்தமான அணுகுமுறையை நீங்கள் மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் அதிகளவு வந்து சேரும். உங்கள் இலக்குகளை திட்டமிட்டு முடிப்பதற்கு கடினமான பணியை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொண்டு கவனத்தோடு செயல்படுவதின் மூலம் உங்களுக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தில்  கவலை உங்களுக்குள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு ஒழுங்குப்படுத்தி செயல்படுத்துவதின் மூலமே உங்களால் மிகச் சிறப்பான முறையில் பணி செய்ய முடியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று ஏற்ற இறக்கமான நிலை நிலவுவதால் அது மனதுக்கு கவலையை ஏற்படுத்தித் தரும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று என்பதை உணர்வீர்கள். பண சுமை அதிகரிப்பதால் மனவருத்தம் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சளி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உங்களுக்கு பாதிப்பு வந்து சேரலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியமான நாளாக இந்த நாள் உங்களுக்கு விளங்குகிறது.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளல்ல. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நீங்கள் எதிர்நீச்சல் அடிக்கலாம்.  உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும் நீங்கள் இன்று ஜொலிக்க முடியாது. மேலும் புதிய திறமைகளை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. உண்மைக்கு புறம்பாக உங்களுக்கு எல்லாம் நடக்கலாம். எனவே கவனமாக இருக்கவும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் சலிப்பு ஏற்படும். சோர்வு தோன்றும் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் கவன குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கையாளும்போது கவனத்தோடு நீங்கள் கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். கண் சம்பந்த பட்ட வியாதிகள் ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள உகந்ததாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்களிடம் மகிழ்ச்சியான எண்ணங்களும் செயல்களும் மேலோங்கி காணப்படும். தியானத்தை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு மன அமைதி ஏற்படலாம். எனவே இறை வழிபாட்டில் உங்களது மனதை செலுத்தவும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி தரும். உங்கள் பணிகளை நல்ல சூழலில் மகிழ்ச்சியோடு செய்து முடிக்க கூடிய காலகட்டமாக இன்றைய நாள் உள்ளது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை என்று ஸ்திரமான நிதி நிலைமையை உள்ளது. உங்கள் நிதியை வளமாக இன்று நீங்கள் சேமிக்கும் திட்டங்களில் பணத்தை போடக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்து இருக்கும். எனவே உங்கள் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்தவிதமான கவலையும் வேண்டாம். மன தைரியம் காரணமாக இன்று உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் நீங்கள் நினைத்தாலும் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடுமையான போராட்டங்களை செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் அதிகம் எதிர்பார்க்க இயலாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகப் பணிகளின் காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படும். அது மட்டுமல்லாமல் உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு செய்வதின் மூலம் தான் எளிதில் முடிக்க முடியும். எனவே திட்டமிட்டு பணி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சிறப்பான நிதி நிலவரம் இல்லை என்று தான் கூற வேண்டும். அதிக செலவுகள் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். எனினும் மேல் சிகிச்சை மற்றும் மருந்தின் மூலம் உங்கள் தாயாரின் உடல் நிலையை எளிதில் குணப்படுத்த முடியும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் அது உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று கவலையை அளிக்கக்கூடிய சூழ்நிலைதான் உங்களுக்கு உள்ளது. உணர்ச்சியை கட்டுப்படுத்தி இருந்தாலும் நீங்கள் இன்று மனக்கவலையோடு தான் இருப்பீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஓரளவு நிம்மதி உங்களுக்கு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. பணியை சிறப்பாக செய்ய நல்ல பலன்களை நீங்கள் பெறலாம். சமயோகித புத்தியோடு செயல்படுவதின் மூலம் பணிகளை எளிதாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் போதிய அளவு இல்லை. இது உங்களுக்கு வருத்தத்தை தரும். சேமிக்க கூடிய வாய்ப்பு இன்று இல்லை எனவே செலவுகளை நீங்கள் யோசித்து செய்யவும். கையில் இருக்கும் கையிருப்பு அனைத்தும் கரையும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இல்லை தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று மந்தமான சூழ்நிலை நிலவுவதால் நீங்கள் செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசிய.ம் இன்று நன்மை பெற எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். கட்டாயம் நன்மை கிடைப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை கையாளும்போது சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கண்ணும் கருத்துமாக உங்கள் பணியில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் உங்கள் பணத்தை கையாளும்போது கவனத்தோடு கையாளுங்கள். கையிருப்பு அனைத்தும் கரைவதால் உங்களுக்கு கவலை ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தியான மேற்கொள்வதின் மூலம் இதுபோன்ற சின்ன சின்ன உபாதைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். எனவே நீங்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதற்காக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இந்த முயற்சியின் மூலம் உங்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும். தேவையான உறுதி தைரியம் உங்களிடம் அதிக அளவு இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளைக் குறித்த நேரத்துக்கு முன்பே முடித்து விடுவீர்கள். இதனால் உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும். எனவே தொழில் ஸ்தானத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் வங்கி இருப்பை சிறப்பாக பராமரித்து திருப்தி அடைவீர்கள். எனவே நிதி நிலைமையை பற்றி கவலை வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் உங்களிடம் நம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …