உங்கள் வீட்டை அழகாக மாற்றக்கூடிய அற்புதமான திறன் படைத்த நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் வீட்டை பாதுகாப்பாக நினைக்கிறீர்கள்.
மேலும் அந்த வீட்டை அழகுப்படுத்த நீங்கள் மென்மேலும் என்னென்ன செய்யலாம் என்பதை நினைத்து செயல்படுகிறீர்கள். அப்படி வீட்டு பராமரிப்பில் நீங்கள் ஈடுபடும்போது அந்த பராமரிப்பினால் உங்களுக்கு துன்பம் ஏதும் ஏற்படாமல் அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகளை இப்போது எந்த கட்டுரையில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வழிமுறை ஒன்று
நீங்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது ரப்பர் கிளவுஸ் அணிந்து கொண்டு சுத்தப்படுத்துவதின் மூலம் உங்கள் கைகளுக்கு அதிக அளவு தீமை ஏற்படாது எனவே நீங்கள் வேலையை முடித்த பின் பிளவுசை சுத்தம் செய்து வைத்து விடலாம்.
வழிமுறை இரண்டு
வீட்டில் பராமரிப்பை செய்யும் போது எப்போதுமே நல்ல கிருமி நாசினி ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உங்களையும் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களையும் பாதுகாக்க முடியும்.
வழிமுறை மூன்று
குறிப்பாக வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெட் சீட்ஸ் , துடைப்பம், வேக்கம் கிளீனர் போன்றவற்றை கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்துவதின் மூலம் கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெறலாம்.
வழிமுறை நான்கு
நீங்கள் மறக்காமல் பிரிட்ஜ் கைப்பிடி கதவுகளின் கைப்பிடி சுவிட்ச் மற்றும் சாக்கெட்டுகள் மைக்ரோவேவ் போன்றவற்றை வாரத்தில் ஒருமுறையாவது சுத்தப்படுத்துங்கள் அப்போது அது அழுக்கு படியாமல் சிறப்பாக இருக்கும்.
வழிமுறை ஐந்து
கிருமி நாசினியை நேரடியாக பயன்படுத்தாமல் நீரில் சிறிதளவு ஊற்றி அந்த கரைசலை கொண்டு மற்ற பொருட்களை துடைக்கும் போது உங்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படாது.
வழிமுறை ஆறு
சுத்தமான பழைய துணிகளை பயன்படுத்தி துடைத்து பிறகு அந்த துணிகளை எரிக்கவோ அல்லது வீசி விடவோ செய்து விடுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை பக்குவமாக நீங்கள் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் உங்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் ஏற்படாது.