ட்ரெண்டிங் சிறுவன் அப்துல் கலாம் ( Abdul Kalam ). சமூக ஊடகங்கள் மிகவும் வலிமை பெற்றது. உலகின் எதோ ஒரு மூலையில் இருக்கும் நபரை கூட ஓவர் நைட்டில் உலக பிரபலமாக்கி விடும். அதே சமயம், உலக பிரபலமாக இருக்கும் எம்மாம் பெரிய மனிதராக இருந்தாலும் ஒரே நாளில் அதள பாதாளத்திலும் தள்ளிவிடும்.
இப்படி சமூக ஊடங்கள் மூலம் பிரபலமாகி புகழ் பெற்றவர்கள் ஏராளம். அந்த வகையில், சமீபத்தில் பிரபலமானவர் தான் சிறுவன் அப்துல் கலாம். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்க கூடாது.
எல்லோரும் நம்மை போன்ற மனிதர்கள் தானே என்று பேசிய அவனது பேச்சு வயதில் மூத்த நபர்களையும் ஒரு நிமிடம் உலுக்கி விட்டது. அவ்வளவு ஏன், தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசிய சிறுவனை அழைத்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல் ஏழ்மையில் இருக்கும் அவனது குடும்பத்திற்கு ஒரு வீடும் கொடுத்து கௌரவித்தார்.
இப்படி வைரலான சிறுவன் ஒரு பள்ளி மாணவன் மட்டும் கிடையாது. ஆம், இவர் சினிமாவில் நடிக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டும் கூட.. சமீபத்தில் வெளியான ஹே சினாமிகா படத்தில் சில காட்சிகளில் தோன்றியுள்ளார் சிறுவன் அப்துல் கலாம்.
இதனை நோட் செய்த ரசிகர்கள், டே தம்பி நீ என்னடா பண்ற இங்க.. என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள். அதே சமயம், திடீரென இவர் ட்ரெண்ட் ஆனாரா..? இல்லை, வேண்டுமென்றே சிலரால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டாரா..? என்ற கேள்வியையும் சிலர் முன் வைத்து வருகிறார்கள்.
எது எப்படியோ.. தன்னுடைய சிறு வயதிலேயே படிப்பு மற்றும் நடிப்பு என குடும்ப சுமையை குறைக்க உதவும் அப்துல் கலாமிற்கு பாராட்டுகள் என்றும் இணைய வாசிகள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.