வீட்டு வேலைகளையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் பெண்கள் பூஜை வேலையை செய்ய வேண்டும் என்றால் கூடுதல் அக்கறையுடன் மிகவும் பவ்யமாக செய்வார்கள். இதற்கு காரணம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று அதி தீவிரமாக அக்கறையோடு பூஜை வேலைகள் அனைத்தையும் இழுத்து போட்டு செய்வார்கள்.
அப்படிப்பட்ட பூஜை வேலைகளை செய்யும் போது படு கஷ்டமாக இருக்கும். அதை சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்து முடிக்க சின்ன சின்ன வீடு குறிப்புகள் போல சில பூஜை குறிப்புகள் உள்ளது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பூஜை குறிப்புகளை இந்த கட்டுரையில் படித்து நீங்கள் பயன்படுத்துங்கள்.
பெண்கள் பயன்படுத்த வேண்டிய ஈஸியான பூஜை குறிப்புகள்
பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு நீங்கள் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்தீர்கள். அப்படி சந்தனம் வைக்கும் போது விரைவில் அது உதிர்ந்து விடும். அப்படி சந்தனம் உதிராமல் இருப்பதற்கு நீங்கள் சந்தனத்தை நீரில் குழைக்காமல் சிறிதளவு பால் விட்டு குழைத்து வைக்கும் போது எளிதில் உதிராது. பார்ப்பதற்கும் பளிச்சென்று இருக்கும். இப்படி செய்வதால் நீங்கள் அடிக்கடி படங்களுக்கு பொட்டு வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
நீங்கள் விளக்கு ஏற்றக்கூடிய விளக்கிலிருந்து நறுமணம் வெளிப்பட வேண்டும் என்றால் நீங்கள் விளக்குக்கு ஊற்றும் எண்ணெயில் சிறிதளவு தசாங்க பவுடரை கலந்து விடுங்கள். இப்படி கலந்த பவுடரில் இருக்கும் எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றும் போது பூஜை அறை நறுமணத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
பூஜை அறையில் நீங்கள் அரிசி மாவில் கோலம் போட விரும்பினால் ஒவ்வொரு முறையும் அரிசி மாவை அரைக்க வேண்டாம். அரிசி மாவு பொடியோடு சில ஸ்பூன் மைதாவையும் கலந்து நீங்கள் கோலம் போட்டால் போதும் பார்ப்பதற்கு அரிசி மாவில் போட்டது போலவே இருக்கும். எளிதில் உதிராது.
சாம்பிராணி அல்லது ஊதுபத்தியை நீரில் நனைத்து விட்டு பிறகு பருத்தி வைத்தால் நீண்ட நேரம் எரியும். அதேபோல் சாம்பிராணியை போடும்போது தசாங்க பவுடர் சிறிதளவு வெட்டிவேரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு நீங்கள் சாம்பிராணி காட்டினால் வீடு முழுவதும் நறுமணப் புகையால் குமு குமு என வாசம் உண்டாகும்.
நீங்கள் பயன்படுத்தும் ஹாண்ட் வாஸ்சை சிறிதளவு தெளித்து சுவாமி படங்களை துடைத்தால் பளிச்சென்று இருப்பதோடு எந்த கரையும் எளிதில் ஏற்படாது. பூச்சிகளும் அண்டாது.
விளக்குகளை சுத்தப்படுத்தவும் ஹேண்ட் வாஷ் நீங்கள் இனி பயன்படுத்தி பாருங்கள். ஹேண்ட் வாஷ்சை நீங்கள் விளக்கு முழுவதும் தேய்த்து விட்டு தேங்காய் மஞ்சி கொண்டு தேய்த்தால் பளிச்சென்று மாறி விடும்.