“காலை டிபனுக்கு ராகி அடை..! ” – இப்படி செய்து சாப்பிடுங்க..!!

காலையில் நேரம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு மிகச் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்த ராகி அடையை உங்கள் வீட்டில் நீங்கள் எளிய முறையில் செய்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

குறிப்பாக ராகியில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் இதை பெண்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் எடுத்துக் கொள்வது நலம் தரும். அத்தோடு நார்ச்சத்தும் இருப்பதால் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக இது அமைந்து விடும்.மேலும் சில மணித்துளிகளிலேயே இந்த ராகி அடையை எளிமையாக செய்து முடித்து விடலாம்.

அப்படிப்பட்ட ராகி அடையச் செய்ய என்னென்ன தேவை என்பதை இப்போது பார்க்கலாம்

ராகி அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்

  1. ராகி மாவு மூன்று கப்
  2. வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது
  3. முருங்கை கீரை இரண்டு கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. தண்ணீர் மாவு பிசைய போதுமான அளவு
  8. பச்சை மிளகாய் 4

செய்முறை

முதலில் ஒரு பௌலை எடுத்து வைத்துக்கொண்டு அதில் ராகி மாவை நன்கு சலித்து போட்டு விடுங்கள். பிறகு பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கீரை இவற்றை போட்டு போதுமான அளவு உப்பை சேர்த்து பூரி மாவு பிசையக்கூடிய பதத்திற்கு பிசைந்து விடவும்.

 பிறகு அடுப்பில்  தோசை கல்லை வைத்து தோசைக்கல் சூடேறியதும் பிசைந்து இருக்கும் மாவுகளை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரை கீழே போட்டு அது சிறிதளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு கையில் தண்ணீரை தொட்டுக்கொண்டு அப்படியே தட்டி விடுங்கள்.

 தட்டி இருக்கும் இதனை எடுத்து தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இப்போது சுவையான ராகி அடை தயார்.

 இந்த அடையை அப்படியே நீங்கள் சாப்பிடலாம். தேவை என்றால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியை இதனோடு தொட்டுக் கொள்ள வைத்துக் சாப்பிட வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam