இறை வழிபாட்டில் பூச்சூட்டுதல், பூக்களை சுவாமிகளுக்கு வைத்தல் என்பது தொன்று தொட்டு இருக்கும் பழக்கமாக உள்ளது. இதில் எந்தெந்த மலர்கள் எந்தெந்த கடவுளுக்கு வைத்து வணங்குவதின் மூலம் என்னென்ன பலன்கள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பிட்ட பூக்களை சூடுவதினால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
பூக்களும் கடவுளும்
நீங்கள் பூஜை செய்யும்போது நாம் வணங்கக்கூடிய கடவுளுக்கு அதற்குரிய பூக்களை வைத்து வழிபடுவது மூலம் கூடுதல் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
பூஜைக்குரிய மலர் மற்றும் கடவுள்
நீங்கள் விஷ்ணு சம்பந்தப்பட்ட கடவுளை வணங்கும்போது துளசியை கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்லது. ஆனால் அதுவே சிவனுக்கு என்றால் நீங்கள் கட்டாயம் துளசியை பயன்படுத்தக் கூடாது. சிவனுக்கு உகந்த வில்வத்தைக் கொண்டு பூஜை செய்வதினால் எண்ணற்ற பலன்களை அடைவதோடு உங்கள் கர்ம வினைகளையும் குறைத்துக் கொள்ளலாம். சிவனுக்கு தாழம்பூவால் எப்போதும் பூஜை செய்யக்கூடாது.
விநாயகருக்கு என்று பூஜை செய்யும்போது விநாயகனுக்கே உரிய தும்பை, அருகு, வெளருக்கு கொன்றை போன்றவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.மேலும் பிள்ளையாருக்கும் நீங்கள் துளசியை அர்சிப்பது தவறான ஒன்றாகும்.
வாசமில்லாத துலுக்க மல்லி பூவை எந்த கடவுளுக்கும் சாத்தவோ அல்லது பூஜைக்கு பயன்படுத்த போ கூடாது. தரையில் விழுந்த மலர்களையும் பூச்சி கடித்த மலர்களையும் பூஜைக்கு மாலைக்கும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறான ஒன்றாகும்.
லக்ஷ்மி தேவிக்கு துளசி மற்றும் தாமரை பூவால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. அன்று மலர்ந்த மலர்களைப் பயன்படுத்தி நீங்கள் பூஜை செய்யும் போது கூடுதல் பலன் கிட்டும்.
செண்பக மொட்டினை பூஜைக்கு பயன்படுத்தலாம். ஆனால் மற்ற பூக்களின் மொட்டுக்களை நீங்கள் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.
மகிழம்பூ ,செண்பகப் பூ, மரிக்கொழுந்து, மருதாணி பூ, நாயுருவி, நெல்லி போன்றவற்றின் இலைகளை கூட நீங்கள் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம். மேலும் இந்த பூக்களை உங்கள் அர்ச்சனையில் சேர்ப்பதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
எனவே வாசம் இல்லாத மகரந்தம் இல்லாத மலர்களை நீங்கள் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது. சுவாமிக்கு மாலையாக கட்டியும் போடக்கூடாது. மேற்கூறிய மலர்களை நீங்கள் உங்கள் போதையில் பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளை அதிகளவு பெறலாம்.