“16 அடி நரசிம்மர் எங்கிருக்கிறார் தெரியுமா..!” – வாங்க தெரிந்து கொள்ளலாம்..!

மொரட்டாண்டி பகுதியானது ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஸ்ரீ மகா விஸ்வரூப பாதாள ஸ்ரீ பிரத்தியங்கரா காளி ஆசிரமமானது வரலாற்று சிறப்புமிக்க 72 அடி உயரம் கொண்ட ஸ்ரீ பிரத்தியங்கிரா காளியாக காட்சி தருகிறாள். இங்கு மேலும் 16 அடி உயரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது.

தற்போது தான் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்கு 48 நாட்கள் மண்டல பூஜையில் பால், தயிர்,நெய், வெண்ணெய் இளநீர் மற்றும் ஒன்பது திரவியங்களாலும், நவ தானியங்களாலும், பழங்களாலும்,  அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வருகிறார்கள். லட்சுமி நரசிம்மனின் அருள் இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் ஒரு உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரளான மக்கள் இந்த கோயிலுக்கு சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இங்கு அமைந்திருக்கும் லக்ஷ்மி நரசிம்மரின் சிலையை பார்க்கும் போது அனைவரும் பரவசம் ஆகி விடுவார்கள். அத்தகைய கலை நேர்த்தியோடு பகவானின் திருவுருவச் சிலை உள்ளது.

48 நாள் நடக்கும் இந்த பூஜையில் பக்தர்கள் அவர்கள் பங்குக்கு வேண்டியதை கொடுத்து வேண்டுதல்களை வைத்திருக்கிறார்கள். இந்த கலி யுகத்தில் பக்தர்களின் குறையை போக்கக்கூடிய அற்புத ஆற்றல் படைத்த லட்சுமி நரசிம்மரை அனைவரும் போற்றி வருவதோடு மட்டுமல்லாமல் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்படி வேண்டியும் வருகிறார்கள்.

நீங்களும் புதுவைக்கு சென்றால் கட்டாயம் மறக்காமல் இந்த 16 அடி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் மாற்றம் கட்டாயம் ஏற்பட்டு, வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகளை லட்சுமி நரசிம்மர் அமைத்துக் கொடுப்பார்.

மேலும் இங்கு இருக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா காளி உங்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற இடர்களை தடுத்து நிறுத்தி வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடித்து ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றை தடுத்து நிறுத்தி சகல சம்பத்தையும் கொடுத்து உங்களை வாழ வைப்பாள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …