“மூக்குக்கு மேல கருப்பு புள்ளிகள்..!” – Don’t Worry இத ஃபாலோ பண்ணுங்க..!

முக அழகுக்காக எத்தனையோ பக்குவங்களை பார்த்து நாம் செய்து முகத்தை பளிச்சென்று வைத்திருந்தாலும் முகத்தில் இருக்கும் அந்த மூக்கு பகுதியின் மேல் இருக்கும் கருப்பு புள்ளிகளால் உங்கள் முக அழகு எடுப்பாக தெரியாமல் டல்லாக மாறிவிடும்.

அப்படி மூக்கின் மேல் இருக்கக்கூடிய கருப்பு புள்ளிகளால் உங்கள் அழகு பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தால் அவற்றை எளிதாக நீக்கக்கூடிய சில அழகு குறிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும் வழிமுறைகள்

உங்கள் வீட்டில் இருக்கும் தக்காளியை இரண்டாக வெட்டி அதை உங்கள் மூக்கின் மேல் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்வது போல செய்து விடுங்கள். எந்த கலவையானது  சிறிது மணி நேரத்தில் உலர்ந்து விட்டால் அதை அப்படியே விட்டு விட்டு நீங்கள் கால் மணி நேரம் கழித்து சுத்தப்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் பற்பசையை சிறிதளவு எடுத்து அதை மூக்கின் மேல் பகுதியில் தேய்த்து விட்டு பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்யும் போது மூக்கையும் நன்கு அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்தால் விரைவில் கடும் புள்ளிகள் நீங்கும்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பை சேர்த்து நீங்கள் உங்கள் மூக்கின் மேல் தடவி நன்கு மசாஜ் செய்து விடுவதின் மூலம் மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.

பேக்கிங் சோடாவை சிறிதளவு நீருடன் சேர்த்து பேஸ்ட் போல் மாற்றி அதனை உங்கள் மூக்கின் மேல் பகுதியில் தடவி உலர விட்டு பின் சுத்தம் செய்வதன் மூலம் மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் போய்விடும்.

தயிருடன் சிறிதளவு ஓட்ஸ் சேர்த்து நன்கு குழைத்து, மூக்கின் மேல் பகுதியில் கரும்புள்ளிகள் எங்கு அதிகம் உள்ளதோ அந்த பகுதியில் தடவி விட்டு பிறகு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் உங்களது கரும்புள்ளிகள் எளிதில் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு தேனை கலந்து உங்கள் மூக்கின் மேல் பகுதியில் நன்கு அப்ளை செய்து விடுங்கள். இந்த கலவை காயும் வரை காத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் மூக்கினை சுத்தப்படுத்துங்கள். இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் மூக்கில் இருக்கும் கருப்புகள் எளிதில் மறைந்து விடும்.

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் பாலோ செய்து உங்கள் மூக்கின் மேல் இருக்கும் கருப்பு புள்ளிகளை விரைவில் பைசா செலவில்லாமல் மாற்றி விடுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …