“கூந்தலுக்கு உயிர் கொடுக்கும் உலர் திராட்சை..!” – அடடா இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!

ஊட்டச்சத்து நிறைந்திருக்கும் உலர் திராட்சை கொண்டு நம் கூந்தலை மிக நல்ல முறையில் பராமரிக்கலாம் என்பதை உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

எனினும் அது உண்மைதான் இது தெரிந்திருந்தால் நீங்கள் இத்தனை நாள் அதை விட்டு வைத்திருக்க மாட்டீர்கள். சரி இனி உங்கள் கூந்தலுக்கு இந்த உலர் திராட்சை எந்த வகையில் பயன் அளிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உலர் திராட்சையின் பயன்கள்

உலர் திராட்சை உங்கள் கூந்தலுக்கு மட்டுமல்லாமல் சருமத்தின் நெகிழ்வுத் தன்மைக்கும் பயன்படுவதால் இதனை அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது இளமையான தோற்றத்தில் காட்சி அளிப்பீர்கள்.

மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சத்துக்களான வைட்டமின் சி மற்றும் ஈ இதில் அதிக அளவு காணப்படுகிறது. மேலும் உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்திற்கு இது உதவி செய்கிறது. அது மட்டுமல்லாமல் தலைமுடி வேர்க்கால்களை பலப்படுத்துவதின் மூலம் முடி உதிர்தல் குறைகிறது. இதனால் வலுவான நீளமான கூந்தலை நீங்கள் எளிதில் பெறலாம்.

முகச்சுருக்கங்களை மறைக்கக் கூடிய வைட்டமின் ஏ சத்து இருப்பதால் உங்கள் முகத்தில் ஏற்படும். வயதான கோடுகளை இது தடுக்க உதவி செய்கிறது.

கருவளையங்கள் உங்கள் கண்களுக்கு கீழிருந்தால் இனி கவலை வேண்டாம். ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த உலர் திராட்சைகளை ஊறவைத்து அந்த தண்ணீரை உங்கள் கரு வளையங்களுக்கு சிறிதளவு கற்றாழை ஜெல் உடன் சேர்த்து மசாஜ் செய்து விடுவதின் மூலம் கருவளையத்தின் கருப்பு மாறிவிடும்.

உலர் திராட்சையில் இருக்கக்கூடிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் செல்லின் ஆரோக்கியத்தை பேணுகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவுடன் திகழ்கிறது.

மிக அதிகமான முடி உதிர்வு தொல்லை இருந்தால் நீங்கள் உலர் திராட்சையை ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து உங்கள் கூந்தலை அலசி வந்தால் கட்டாயம் உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்படாது. பொடுகு தொல்லையும் நீங்கும்.

யூ வி கதிர்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள இந்த உலர் திராட்சை உதவி செய்கிறது. மேலும் இது சருமத்தின் மீது ஒரு மேலடுக்கை உண்டாக்கி உங்களை யூவி கதிர்களின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்கிறது.

முகத்தை அலம்புவதற்கு முன்பு உலர் திராட்சை தண்ணீரை நீங்கள் எடுத்து சுத்தம் செய்து வருவதின் மூலம் சருமத் துளைகளில் இருக்கும் அடைப்புக்கள் நீங்கி முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam