“அடுப்பே வேண்டாம் ஈஸியா அவுல் வாழைப்பழ புட்டிங்..!” – ஐந்து நிமிடத்தில் படாபட்..!!

குழந்தைகள் விரும்பக்கூடிய அவுல் வாழைப்பழம் புட்டிங்கை நீங்கள் அடுப்பில் வைக்காமலேயே ஈஸியாக 5 நிமிடத்தில் செய்து விடலாம். அதுவும் கூடுதல் சத்தோடு இருக்கும் எந்த புட்டிங்கை மாலை நேரங்களில் உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பதினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகும் சத்து மிகுந்த இந்த பண்டத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து அசத்த முயற்சி செய்து பாருங்கள்.

ஈசியாக எனர்ஜியை அள்ளித் தரக்கூடிய இந்த அவுல் வாழைப்பழ புட்டிங் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அவுல் வாழைப்பழ புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்

1.அவுல் ஒரு கப்

2.நாட்டு சர்க்கரை தேவை கேட்ப

3.தேங்காய்த்துருவல் கால் கப்

4.செவ்வாழை இரண்டு

செய்முறை

முதலில் அவுலை நன்றாக கழுவ வேண்டும். அவுல் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் 10 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். இல்லையென்றால் நனைத்த உடனே எடுத்து விடுங்கள் குழைந்தால் புட்டிங் செய்ய நன்றாக இருக்காது.

அவுல் ஊறி இருக்கக்கூடிய பதத்தில் நீங்கள் அதை நீரில் இருந்து நன்கு பிழிந்து எடுத்து விட்டு ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதனோடு தேவையான அளவு நாட்டுச்சர்க்கரையை சேர்த்து விடுங்கள்.

 பிறகு துருவி வைத்திருக்கும் பிரஷ் ஆன தேங்காய் துருவலை போட்டு வாழைப்பழத்தையும் போட்டு நன்றாக பிசைந்து விடுங்கள்.

இப்போது பிசைந்து வைத்திருக்கும் இந்த கலவைகளை உருண்டையாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுங்கள் சுவையான வாழைப்பழ புட்டிங் இதுதான்.

தேவை எனில் இதனோடு நீங்கள் நட்ஸ் மற்றும் ட்ரை கிரேப்சை போட்டு கூடுதல் சுவையோடு கொடுக்கலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய இந்த பண்டமானது உடலுக்கு ஆரோக்கியமானது. அது மட்டுமல்லாமல் பாரம்பரிய உணவாகவும் இது திகழ்கிறது.

 எனவே உங்கள் வீட்டில் சத்துமிகு இந்த வாழைப்பழ புட்டிங்கை செய்து கொடுத்து உங்கள் பிள்ளைகளை அசத்துங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam