நம் வீட்டு சமையல் அறையை கூட நாம் பயன்படுத்தும் பொருட்களால் நமக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஐஸ்வரியமும் கிடைக்கும். அப்படி ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் கிடைக்க வேண்டும் என்றால் அந்த சமையல் அறையில் நீங்கள் என்னென்ன பொருட்களை எப்படி வைக்க வேண்டும்? அந்த சமையல் அறையில் எந்த பொருட்கள் இருக்கக் கூடாது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சமையலறையில் இருக்க வேண்டிய பொருட்கள் மற்றும் இருக்கக் கூடாதவை
பொதுவாக சமையல் அறையானது அக்னி மூலையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இங்கு பழைய பொருட்களை குவித்து வைத்திருப்பதோ குப்பைகளை சேர்த்து வைத்திருப்பது ஆகாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே சேரும் குப்பைகளை அவ்வப்போது நீங்கள் வெளியேற்றி விடுவது மிகவும் நல்லது. இதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சமையல் அறையில் பால் காய்ச்சும் போது பால் பொங்கி கீழை விழக் கூடாது. அதுபோல நீங்கள் உங்கள் அடுப்பில் பால் காய்ச்சி கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு சமையலை துவங்குவது மிகவும் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி கடாட்சம் அதிகரித்து ஐஸ்வர்யம் ஏற்படும்.
அசைவ உணவுகளை வைத்திருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் கடவுளுக்கு படைக்க கூடிய பொருட்களை இணைந்து வைத்திருப்பது தவறானதாகும்.
சமையல் அறையை எப்போதும் பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். பாத்திரங்களை அதிகளவு ஜிங்க்கில் போட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது.உடனடியாக பாத்திரங்களை துலக்கி வைப்பது மிகவும் சிறப்பானது.
சமையல் கட்டில் பிடி இல்லாத கத்தி பிடி இல்லாத அரிவாள் போன்றவற்றை வைத்து பயன்படுத்துவது தவறானது. இதனை வைத்து இருந்தால் தயவு செய்து அப்புறப்படுத்தி விடுங்கள்.
அரிசி அளக்கக்கூடிய படிகளை நிமிர்த்தி தான் வைக்க வேண்டுமே ஒழிய அதை குப்புற போட்டு வைப்பது தவறானது. தயவு செய்து அதை யாரும் அப்படி வைக்க கூடாது.
மேற்கூறிய வழிமுறைகளை கடைப்பிடித்து உங்கள் வீட்டு சமையல் கட்டை நீங்கள் ஜாக்கிரதியாகவும் சுத்தமாகவும் பராமரிப்பதன் மூலம் உங்கள் ஆயுள் கூடுவதோடு ஐஸ்வரியமும் உங்கள் வீட்டில் அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.