இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2023 வியாழக்கிழமை.மனிதன் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்ற ஜாதகத்தின் மூலம் அவன் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும்.மேலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீய பலன்கள் இருந்து அவர்களை தற்காத்துக் கொள்ள எப்படிப்பட்ட பரிகாரங்களை செய்தால் நிவர்த்தி கிடைக்கும் என்பது போன்ற விஷயங்களை மிகவும் அற்புதமான முறையில் எடுத்து இயம்பும் ஜோதிடக் கலை என்றுமே மனிதர்களுக்கு பக்க பலமாக செயல்படுகிறது.

எனவே குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தை கணித்து எழுதுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பெண் ருதுவாகும் நேரத்தை கணித்தும், திருமணத்துக்கு முன்பு பொருத்தங்கள் இருக்கிறதா என்று திருமண பொருத்தங்களை ஆணுக்கும் பெண்ணிற்கும் பார்த்து சரியான பொருத்தம் உள்ள ஜாதகங்களை தேர்வு செய்து அவர்களுக்கு திருமணங்களை செய் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் பொறுமையை சோதிக்கக்கூடிய நாள். கடினமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால் நீங்கள் சில சௌரியங்களை இழக்க வேண்டி இருக்கும். நீங்கள் சாதகமான பலன்களை அடைய வேண்டுமென்றால் பொறுமையுடன் காத்திருப்பது மிகவும் அவசியம். அதற்கு முன் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை கொள்ள கூடிய அணுகுமுறை இருக்க வேண்டும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிக பணிகள் இருக்கும் நீங்கள் பணிகளை ஒழுங்குப்படுத்தி திட்டமிட்டபடி செய்வதின் மூலம் வெற்றி காணலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்க முடியாது. சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கையில் இருக்கும் பணம் செலவாகும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தித் தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிதமான ஆரோக்கியமே காணப்படுகிறது. தோள் வலி பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு அமைதி ஏற்படும். எனவே இறை வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நன்மையான பலன்கள் அதிக அளவு உங்களுக்கு கிடைக்கும். வாழ்வில் நன்மை தீமை ஆகியவற்றை நீங்கள் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம். நல்ல பலன்களை இன்று காண சமூகமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டி இருக்கும். எனவே இந்த நாள் இனிய நாளாக மாறுவது உங்கள் கையில் தான் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சவால்கள் நிறைந்திருக்கும்.நீங்கள் எதையும் சமாளித்து நட்பையர்கள் பெறுவீர்கள். வளர்ச்சிக்கான கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு காணப்படும். சேமிப்பு ஆற்றல் அதிகரித்து இருக்கும். பணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கக் கூடிய நாள். உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். அனைத்து விதத்திலும் இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் மிகவும் உற்சாகத்தோடு பணியை ஆற்றுவீர்கள். நீங்கள் விரும்பி செய்யும் பணி மிக எளிதில் முடிந்து விடும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான வளர்ச்சி காணப்படுகிறது. பணப்புழக்கம் சீராகவும் அதிகரித்தும் இருக்கும். முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முற்படுவீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீங்கள் இன்று மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே என்று சாதகமான பலன்கள் உங்களுக்கு இல்லை. இலக்குகளை அடைய முழு முயற்சி எடுக்க வேண்டும். விரைவாக செயல்படுவதை தவிர்த்து விடுவது உங்களுக்கு நல்லது. ஏனென்றால் பாதகமான சூழ்நிலை நிலவுவதால் பொறுமையாக இருக்கவும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்களுக்கு அன்றாட பணிகளை கவனத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருப்பீர்கள். பணி சுமையும் கூடுதலாக இருப்பதால் பணியில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருப்பதால் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் குறைவான பணப்புழக்கம் இருப்பதின் காரணமாக உங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டம் காரணமாக கை கால்களில் வலிகள் ஏற்படுவதற்கு அதிக சாத்திய கூறுகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று விருப்பமான பலன்களை அடைய வேண்டும் என்ற நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று உங்கள் செயல்களில் திருப்தி இருக்கும். மந்திர ஜெபம் பிரார்த்தனை செய்வதின் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிவயிடத்தில் நீங்கள் சிறப்பான பலன்களை காண திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டும். அனைவரையும் அனுசரித்துப் போவதின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை செலவுகள் அதிகமாகும் எனவே கவனம் தேவை. சிக்கனத்தை கடைபிடிக்கவும். இன்று செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் எரிச்சலால் பாதிப்புகள் ஏற்படலாம். கண் பாதிப்பு ஏற்படும் என்பதால் நீங்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாள் இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் இன்று எடுப்பதன் மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எனவே முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

பணியில் உங்களுக்கு நல்ல நிலை ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. பணம் வரவு அதிக அளவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.அதிர்ஷ்டகரமான நாளாக இன்று உங்களுக்கு இருக்கும் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாளாக காணப்படுகிறது. உங்கள் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் அதிகரித்து இருக்கும். ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று வெற்றி மேல் வெற்றி வந்து சேரக்கூடிய நாளாக உள்ளது. உங்கள் விருப்பங்கள் விரைவில் ஈடேறும். முக்கிய முடிவுகளை நீங்கள் இருப்பதின் மூலம் நல்ல பலன்களை எளிதில் என்று பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு பணியின் மூலம் நல்ல நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிட சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எளிதில் உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று உங்கள் சேமிப்பு உயரும். பணப்புழக்கம் அதிகரித்து இருப்பதால் நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். மேலும் மேலும் பணத்தை எதிர் முதலீடு செய்யலாம் என்பது போற்ற எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் சிறப்பாக உள்ளது. அமைதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிப்பீர்கள் எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே என்று நீங்கள் உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது கட்டாயமாகும். இதன் மூலம் தான் நீங்கள் நல்ல பலன்களை பெற முடியும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருங்கள். உங்கள் முயற்சிகளில் நீங்கள் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி அதிகளவு காணப்படும். பணிகளை கவனமாக மேற்கொள்ள நீங்கள் உங்கள் சௌரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. எனவே கண்ணும் கருத்துமாக தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். அது உங்களை மேலும் கவலையில் ஆழ்த்தும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அசௌகரிகம் அதிகரித்து காணப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகள் தலை தூக்கும். தூக்கமின்மை தோல் பிரச்சனையால் பாதிப்புகள் ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே என்று உங்கள் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பாதையை நோக்கி நீங்கள் செயலாற்று உகந்த நாளாக உள்ளது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் புத்திசாலித்தனத்தோடும் திறமையோடும் செயல்படுவீர்கள். இன்றும் முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். எனவே தொழிலில் எந்த குழப்பமும் இல்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும். இது தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி கரமாக இருக்கும். உங்கள் சேமிப்பை உயர்த்த நீங்கள் இன்று முயற்சி செய்வீர்கள். இதனால் நல்ல பலன் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறந்த ஆரோக்கியம் உங்களிடையே காணப்படும். உங்கள் மகிழ்ச்சிகரமான மனநிலை காரணமாக ஆரோக்கியத்தில் எந்த விதமான குறையும் இல்லை என்று கூறலாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று மிகவும் துடிப்பான நாள் என்று கூறலாம். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய நீங்கள் திட்டங்களை போட்டு வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். உங்களின் உறுதியான போக்கு மற்றும் மன உறுதியின் மூலம் மென்மேலும் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை சக பணியாளர்கள் அனைவரும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிறப்பாக பணியாற்றி உங்கள் திறமைகளை நீங்கள் நிரூபிக்க கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். இந்த பணத்தை சுப காரியங்களுக்காக நீங்கள் பயன்படுத்த இயலும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சௌரியங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக இருக்கும். ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் முடிவு எடுக்கும்போது அமைதியோடும் கட்டுப்பாடோடும் எடுக்க வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செய்யுங்கள். அனுசரணையான அணுகுமுறையின் மூலமே நன்மை ஏற்படும். முக்கிய முடிவுகளை என்று எடுக்க வேண்டாம்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் எல்லா பணிகளையும் உங்களால் முடிக்க முடியாது. பனிச்சுமை அதிகமாக காணப்படுகிறது. எனவே தொழிலில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அதிக செலவுகள் காணப்படுகிறது. சிக்கனமாக செலவுகளை செய்ய வேண்டும். செலவுகளில் அவசியம் கட்டுப்பாட்டை நீங்கள் உங்களுக்குள் விதித்து கொண்டு நடைமுறைப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான ஆரோக்கியத்துக்கு உணவு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆன்மீக ஈடுபாடு காரணமாக மன அமைதி ஏற்படும். இது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று குடும்பப் பிரச்சனை காரணமாக கவலையோடு இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்ற முடியும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதை தள்ளிப் போடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்காது. இன்று கொடுக்கப்பட்ட பணிகளை கவனத்தோடு செய்து முடிப்பீர்கள். பணியில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை காணப்படும். இன்றைய அடிப்படைத் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. எனவே அனாவசியமான செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். எனினும் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இல்லை என்பதை புரிந்து கொண்டால் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக உயரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …