அழகை அழகால் ஆராதனை செய்பவர்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் இன்று தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இதற்கு என்று ஒரு பங்கு பணத்தை அவர்கள் குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கி வைத்து செலவு செய்கிறார்கள்.
அழகியல் சம்பந்தப்பட்ட பொருட்களையும் வாரி வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் பைசா செலவில்லாமல் வேண்டாம் என்று தூர எறிய கூடிய பொருட்களைக் கொண்டு தங்களது மேனி அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.அப்படிப்பட்ட பொருட்களும் அதனால் கிடைக்கும் அழகியல் நன்மைகளும் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
வீட்டில் அரிசியை கழுவி அந்த கழிநீரை வெளியே தூர கொட்டுவார்கள். இனிமேல் கழிநீரை தூரம் ஊற்றுவதற்கு முன்பு உங்கள் முகம் கை கால்களை கழுவி விட்டு பாருங்கள். அழுக்குகள் அதிகம் இருந்தாலும் எண்ணெய் பசை இருந்தாலும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தாலும் அவற்றை நீக்கக்கூடிய தன்மை இந்த கழி நீருக்கு உள்ளது.
அதுபோலவே ஆரஞ்சு பழத்தை தின்றுவிட்டு அதன் தோல்களை தூரப்போடுவார்கள். இனிமேல் அந்த தோல்களை தூர போடாமல் வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனோடு தேன் கலந்து உங்கள் முகத்தில் பூசி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கண்களுக்கு அடியில் இருக்கும் கருவளையம் நீங்கி முகம் பொலிவுடன் காட்சி அளிக்கும்.
தேங்காய் உடைக்கும் போது கிடைக்கும் அந்த தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் அந்த தேங்காய் நீரை தடவி ஊற விட்டு பிறகு நீங்கள் குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவுவதன் மூலம் முகம் பளிச்சென்று மாறுவதோடு கருந்தளும்புகளும் நீங்கி வெண்மையாகும்.
தூக்கி எறியும் வாழைப்பழத் தோலை உங்கள் கண்களில் அப்படியே வைத்து சில நிமிடங்கள் கண்களை மூடி வைத்திருங்கள். குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பதின் மூலம் கண்கள் குளிமை அடைவதோடு மட்டுமல்லாமல் கண்களில் இருக்கக்கூடிய கருமை நிறமும் நீங்கும்.
வேண்டாம் என தூக்கி எறிய கூடிய வடித்த கஞ்சியில் சிறிதளவு நீர் சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்தில் நன்கு பூசி விடுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படாது அப்படி ஏற்பட்டிருந்தாலும் அது விரைவில் மறைந்துவிடும்.