சமீபத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இசைஞானி இளையராஜா பற்றிய தனது கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
இளையராஜா இசைஞானிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை ஒரு குருவாக மதித்து, அவரது பாடல்களை பற்றி மணிக்கணக்கில் என்னால் பேச முடியும். ஆனால், சில நேரங்களில் அவர் பேசும் கருத்துகளில்தான் நான் மிகவும் மாறுபடுகிறேன்.
சமீபத்தில் ஒரு நேர்காணல்ல இளையராஜா பேசும்போது, இயேசுநாதர் பிறந்தார், இறந்தார், உயிர்த்தெழுந்தார் என்று சொல்வது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், ரமண மகரிஷிதான் இறந்து உயிர்த்தெழுந்தவர் என்று ஒரு கருத்து சொல்லி இருக்கிறார்.
ஆனால், ரமண மகரிஷி பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநரே, அது பொய் என்று மறுத்திருக்கும் நிலையில், இயேசுவை வழிபடும் பல கோடி மக்கள் இருக்கிற சூழ்நிலையில், அவர்கள் மனம் நோகும்படி இளையராஜா பேசி இருக்கிறார்.
இளையராஜா மிகச்சிறந்த ஒரு இசைஞானி; இசையில் அவள் ஒரு வல்லுநர், நிபுணர் என்பதை எல்லாம் யாருமே மறுக்க முடியாது ஆனால், அதே நேரத்தில், அவர் ஒரு சாதாரண மனிதராக, அவர் மற்றவர் மனங்களை காயப்படுத்தகிற விதமாக, பேசுகின்ற விதம்தான் வந்து அவர் சிறந்த மனிதராக நடந்துகொள்வதில்லை என்பதை காட்டுகிறது.
ரஜினி கூட இளையராஜாவை, ‘சாமி சாமி’ என்றுதான் கூப்பிடுகிறார். ஆனால், அந்த அளவுக்கு ஒரு ஆன்மீகவாதியாக, சிறந்த மனிதராக இளையராஜா இல்லை என்பதே கசப்பான உண்மை.
இசையை பொருத்தவரைக்கும் இளையராஜாவை, யாரும் குறை சொல்ல முடியாது அவர் மிகச்சிறந்த ஒரு இசைஞானி என்பதை யாருமே மறுக்க முடியாது ஆனால், அதே நேரத்தில், அவர் ஆன்மீகவாதியாக பார்த்தால், நிதானம், பொறுமையற்ற மனிதராக, ஏமாற்றமே தருகிறார்.
நானும் இளையராஜாவின் ரசிகன்தான். நான் அவரோட பாடல்களை பற்றி, இசையை பற்றி மணிக்கணக்கில் பெருமையாகப் பேசுவேன் ஆனால், இசையை தாண்டி ஒரு மனிதராக அவரை பார்க்கும் போது, ஒரு ஏமாற்றுக்காரராகவே, எனக்கு தோன்றுகிறது, என்று கூறி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
இவரும் ஒரு இசையமைப்பாளர்தான். சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் அடிக்கடி மீடியாக்களில் இவர் பரபரப்பாக பேசப்படுவர் என்பதும் கவனிக்கத்தக்கது.