இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2023 சனிக்கிழமை.ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கும் கூடிய கருத்துக்களை நீங்கள் கவனமாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அசுப பலன்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் அதற்குரிய பரிகாரங்களை அந்த காலகட்டத்திலேயே நீங்கள் செய்து விடுவதன் மூலம் தலைக்கு வரும் ஆபத்து தலைப்பாகையோடு போகும் என்று சொல்லக்கூடிய பழமொழிக்கு ஏற்ப மழை போல் வரும் ஆபத்து பனி போல விலகும்.

எனவே நீங்கள் எந்த காரியத்தையும் செய்வதற்கு முன்பு உங்கள் ஜாதகத்தை ஒரு முறை நன்கு ஆராய்ந்து பார்த்து பிறகு அதற்கு தக்கவாறு உங்கள் காரியங்களை செயல்படுத்துவதால் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும் நீங்கள் ரிலாக்ஸாக இருக்க முயற்சி செய்வது மிகவும் நல்லது. இந்த நாள் சிறப்பாக அமைய இறைவழிபாட்டில் உங்களது மனதை செலுத்துவதின் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று ஓய்வில்லாமல் உழைக்கக் கூடிய அளவுக்கு உங்கள் பணி மிகுந்து இருக்கும். இதன் காரணமாக சில அசௌரியங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே தொழிலில் கவனத்தோடு இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகமான செலவுகள் காரணமாக உங்களுக்கு கவலை ஏற்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வது மிகவும் அவசியம் என்று கூறலாம்.

களைப்போடு நீங்கள் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது மிகவும் அவசியமானதாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே என்று முக்கிய முடிவுகள் எடுப்பதை நீங்கள் தவிர்த்து விடுங்கள். உங்கள் செயல்களில் சிறிது கவனம் இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள். எனினும் திட்டமிட்டு செயல்படுதலின் மூலம் நன்மைகளை காண முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வேலைகள் மிகவும் கடினமாக இருக்கும். பொறுமையை இழந்து இருக்கும் நீங்கள் பொறுமையோடு இருப்பது மிகவும் அவசியம். உங்கள் திறமை என்று கேள்விக்குறியாகி விடும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி சீராக இல்லை. கூடுதல் செலவுகள் ஏற்படும். இது மேலும் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கை, கால் மற்றும் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டாம். மிதமாகவும் சூடான உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே சிறந்த முறையில் திட்டமிடுதல் காரணமாக உங்களுக்கு நன்மைகள் வந்து சேரலாம். இன்று உங்களுடைய காணப்படும் அவநம்பிக்கை உணர்வு காரணமாக வெற்றி இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து இருக்கும். எனவே பிரார்த்தனை தியானம் மூலம் நீங்கள் இவற்றை உயர்த்திக்கொள்ள முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சக பணியாளர்களிடம் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. பொறுமையுடன் எதையும் செய்வதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களை பார்க்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. கூடுதல் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். எனவே நீங்கள் சிக்கனமாக செலவு செய்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன அழுத்தத்தின் காரணமாக உடலில் புதிய உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தியானம் செய்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

கடகம்

கடக ராசி நேயர்களே என்று உங்களின் முற்போக்கான வளர்ச்சி ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதின் மூலம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக எங்களால் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் இன்று உங்கள் திறமைகள் அதிக அளவு வெளிப்படும். கடினமான பணிகளை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். எனவே பல பேர் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சீராக உள்ளது. எதிர்காலத்துக்கு தேவையான பணங்களை நீங்கள் சேமிப்பீர்கள். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆரோக்கியமும் அதுபோல மிகவும் சிறப்பாக இன்று அமைந்துள்ளது. உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் நீங்கள் இருப்பீர்கள். ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட தேவையில்லை.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மீக காரியங்களில் இன்று அதிக அளவு நீங்கள் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் மகிழ்ச்சி உங்களுக்கு அதிகமாக கிட்டும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம். அந்த முடிவுகளை தள்ளிப் போடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் இன்று அபாரமாக உங்கள் திறமையை காட்டுவீர்கள். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். சிறந்த முறையில் திட்டமிட்டு பணிகளை செய்வதின் மூலம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை ஆகாயமான நாள் என்று கூறலாம். கடன் வாங்குவது பற்றிய சிந்தனை ஏற்படும். மேலும் கையில் இருக்கும் பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று சிறப்பான நாள் என்று கூறலாம். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறையும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று வாழ்க்கையின் தன்மை என்ன என்று புரிந்து கொள்வீர்கள். இறை வழிபாடு மற்றும் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் மறக்க முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை வேலைப்பது அதிகரித்து இருக்கும். அதை சரியாக முடிக்க நீங்கள் முயற்சி செய்ய திட்டமிடுதல் அவசியம் என்பதை புரிந்து கொண்டு தொழிற் ஸ்தானத்தில் கவனத்தை செலுத்துங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்து காணப்படும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை நிலவும். எனவே சிக்கனமாக செலவுகளை நீங்கள் செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கண் பரிசோதனை செய்து கொள்வதும் மிகவும் நல்லது. அமைதியும் பொறுமையையும் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நாளை இனிமையான நாளாக்கவும் உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உற்சாகம் குறைந்து இருக்கும். உங்களுடைய வளர்ச்சி அதிகமாக இன்று இருக்காது. எனவே நீங்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் இந்த நாளை கழிக்க வேண்டும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையாது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் பொறுமையின்றி இருப்பீர்கள். அதிருப்தியின் நிலவும். எனவே தொழிலில் கண்ணும் கருத்துமாக மனதை செலுத்துவதின் மூலம் தான் உங்களால் பணிகளை முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கை மீறி செலவுகள் ஆகும். பணம் கையில் இல்லாமல் கரையும். எனவே சிக்கனத்தோடு இருக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சளி, தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று சுறுசுறுப்பாக நீங்கள் இருப்பீர்கள். சிறந்த அணுகுமுறையின் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். இன்று வெளிப்படையாக பேசுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை கடினமான பணிகளை இன்று எளிதாக முடிக்க கூடிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.எதிலும் திருப்தி அடைவீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதால் பணிகளை எளிய முறையில் விரைவாக முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்த வரை இன்று பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். அதிக நேரம் உழைத்து நீங்கள் ஊக்கத்தொகையை பெறுவீர்கள். பண வரவும் வந்து சேரும். எனவே நிதி நிலைமையை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் நீங்கள் இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே என்று ஆன்மீக காரியங்களில் அதிக அளவு ஈடுபடுவதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும். அது மட்டுமல்லாமல் இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்ற முயற்சி செய்வீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளைக் குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். மேல் அதிகாரிகள் உங்களை கட்டாயம் பாராட்டுவார்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை என்று சீராக இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய அளவு உங்களது கையிருப்பு உயரும். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 ஆரோக்கியமும் அதுபோல உற்சாகமாக இருக்கும் எந்த விதமான ஆரோக்கிய சீர் தேடும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தில் நீங்கள் சிறப்பாக இருப்பதால் அச்சம் தேவையில்லை.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று ஏமாற்றங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. உங்கள் செயல்களை திட்டமிட்டு நீங்கள் செய்வதின் மூலமே நன்மைகள் கிடைக்கும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை தன்னம்பிக்கை இழந்து இருக்கும் உங்களுக்கு பணிகளை எளிதில் முடிக்க கூடிய ஆற்றல் இருக்காது. மிகவும் கடினமாகவே உணர்ந்து பணிகளை செய்வீர்கள். திட்டமிட்டு செய்வதின் மூலம் உங்கள் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் ஏற்படும். கடன் வாங்கி செலவுகளை நீங்கள் செய்யலாம். எனவே சிக்கனத்தை அவசியம் கடைபிடிப்பது இன்றைய நாளில் முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. குளிர்ச்சியான உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. எனவே மிதமான சூடான உணவுகளை சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று நீங்கள் எதிர்பாராத பலன்களை பெறக்கூடிய நாள் உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் நீங்கள் இன்று உங்களது இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள்.

தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று திறமையோடு செயலாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். பணிகளில் அதிக அளவு கவனத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் தொழிலை சுனக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாக காணப்படும். பணத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். சிக்கனமான செலவுகளை செய்வதின் மூலமே உங்கள் கையிருப்பை உயர்த்திக் கொள்ள முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை தாயாவின் உடல் நிலையில் சற்று கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். அவர்களுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். உங்களது ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனமாக கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு திறமைகளை சரியான வழியில் பயன்படுத்தி வெற்றிகளை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளக்கூடிய நாளாக உள்ளது. விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொண்டு வாழ்வீர்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சிறந்த முறையில் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கடினமான பணிகளை நீங்கள் எளிதாக செய்து முடிக்க கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை சீராக இருக்கும். இன்று உங்கள் பணத்தை கணிசமான அளவு சேமிக்க முடியும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதால் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …