நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிக அளவு தரக்கூடிய கோவைக்காய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்க்கக்கூடிய ஒரு முக்கிய காய் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.
உடலுக்கு இப்படிப்பட்ட நன்மைகளைச் செய்யக்கூடிய கோவைக்காயை எப்படி வறுவல் செய்வது என்பது பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கோவைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
1.கோவக்காய் அரை கிலோ
2.உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
3.எண்ணெய் இரண்டு டீஸ்பூன்
4.கடுகு ஒரு ஸ்பூன்
5.சீரகம் ஒரு ஸ்பூன்
6.சிவப்பு மிளகாய் இரண்டு
7.பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
8.தேவையான அளவு கருவேப்பிலை
9.உப்பு தேவையான அளவு 10.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
11.மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
12.வேர்க்கடலை கால் கப்
13.மல்லித்தூள் அரை டீஸ்பூன்
மசாலா அரைக்க
13.துருவிய தேங்காய் கால் கப்
14.சிவப்பு மிளகாய் 6
15.பூண்டு 5 பல்
16.பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கோவைக்காய் வறுவல் செய்ய மசாலாத்தூளை அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரு வாணலியில் துருவிய தேங்காய், வர மிளகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு அதனை மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த கலவையை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து மீண்டும் நீங்கள் அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து நன்கு பொரிய விடவும்.
இவை பொறிந்த பிறகு நீங்கள் வெட்டி வைத்திருக்கும் கோவை காயை இதில் போட்டு போதுமான அளவு உப்பை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
கோவக்காய் நன்கு வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து அரைத்த மசாலாவை நன்கு சேர்த்து கலக்கி விடவும்.
இறுதியாக வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை இதனோடு சேர்த்து வறுவல் நன்கு பிரையாகும் வரை காத்திருந்து தக்க பதத்திற்கு வந்த பின்பு இறக்கி விடுங்கள் இப்போது கோவைக்காய் வறுவல் ரெடி.