“நா வறட்சியை குறைத்து வெயிலின் தாக்கத்தை தடுக்கும் மல்டி ஃப்ரூட் ஜூஸ்..!” – நீங்களே போடலாம்..!!

வெயிலில் தாக்கம் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தாக்கத்தினால் அதிக பேருக்கு நா வறட்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வெளியே செல்லும்போது கூடுதலாக வெயிலின் தாக்கத்தின் காரணமாக தலைசுற்றல் போன்றவை ஏற்படும்.

 இதை தடுக்க உங்கள் வீட்டிலேயே நீங்கள் இந்த  மல்டி ஃப்ரூட் ஜூஸ் செய்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பதின் காரணமாக உங்களுக்கு நா வறட்சியோ வெயிலின் காரணத்தால் ஏற்படும் பாதிப்புகளோ ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மல்டிப்ரூட் ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

1.அரை மூடி எலுமிச்சம் சாறு

2.ஆப்பிள் ஒரு துண்டு

3.திராட்சை 10

4.வெள்ளரிக்காய் ஒரு துண்டு

5.தர்பூசணி ஒரு துண்டு

6.இரண்டு புதினா இலை

7.ஏலக்காய் ஒன்று

8.தேன் இரண்டு டீஸ்பூன்

9.ஆரஞ்சு பழம் ஒன்று

10.பேரீச்சம்பழம் ஒன்று

செய்முறை

 முதலில் எலுமிச்சம் பழத்திலிருந்து அரை மூடி படத்தை எடுத்து அதில் உள்ள சாறை பிழிந்து தனியாக ஒரு டம்ளரில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் திராட்சை பழத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். அதுபோல எல்லா பழத்தையும் நீங்கள் நீரில் போட்டு சிறிதளவு உப்பை சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எந்த பழங்களை நீங்கள் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அடித்து தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதனை எடுத்து டம்ளரில் விட்ட பிறகு உங்களின் இனிப்பு சுவைக்கு தக்கவாறு தேனினை கலந்து நன்கு கலக்கி விடுங்கள். எனக்கு புரிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளுங்கள்.

அத்தோடு இரண்டு புதினா இலைகளை மேலே போட்டு விடுங்கள். ஏற்கனவே பழங்களோடு சேர்த்து நீங்கள் ஏலக்காயையும் அரைத்து இருப்பீர்கள். எனவே ஏலக்காய் மனமனக்க இந்த பழ ரசத்தை நீங்கள் தினமும் பருகுவதின் மூலம் வெயிலின் தாக்கத்தையோ நான் வறட்சியோ உங்களுக்கு ஏற்படாது.

மேலும் இந்த ஜூசை நீங்கள் செய்த உடனேயே குடித்து விடுங்கள் குளிர் பதன பெட்டியில் வைத்து குடிக்க வேண்டாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …