சிம்புவின் படத்தில் ஐட்டம் டான்ஸ்..! – ஆர்யாவின் மனைவி சாயிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா..?

தமிழிலும் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகத்திலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் நடிகை சாயிஷா. இவர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் 1997 ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்தவர். இவரது கணவர் தமிழ் திரையுலகில் அனைவரும் அறிந்த முக்கியமான திரை பிரபலமான ஆர்யா ஆகும்.

நடிகை சாய்ஷாவின் தந்தை பிரபல நடிகர் ஆன சுமேத் சைக்கால் மற்றும் ஷாகின்பானு என்பவர்களுக்கு மகளாக பிறந்தவர் தான் இவர்.2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்த முன் வந்தார் நடிகை சாய்ஷா.

அதன் பிறகு இந்தி திரைப்படமான சிவாய் என்ற திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு அனுஷ்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்பு தமிழில் வனமகன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மிகப்பெரிய தொழில் மகளாக காவியா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார் நடிகை சாய்ஷா.

இதன் பின்பு சில காலம் இந்த பட வாய்ப்புகளும் தமிழில் இல்லாமல் இருந்தபோது 2018 இல் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜோடியாக கண்ணுக்கு இனிய ஆள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது இந்த திரைப்படமே நடிகை சாய்ஷாவை தமிழ்நாட்டில் ஒரு முக்கிய நடிகையாக அறிமுகப்படுத்தியது.

அதன் பின்பு தொடர்ச்சியாக விஜய் சேதுபதியுடன் ஜிங்கா மீண்டும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் மீண்டும் சூர்யாவுடன் காப்பான் முதலிய திரைப்படங்களில் தொடர்ச்சியாக தமிழில் நடித்து வந்தார்.

2019 பிப்ரவரி 13ஆம் தேதி சாயிஷா தனது twitter பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் மார்ச் 8 2019 நடந்து முடிந்தது இந்த திருமணத்தில் இந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தை சேர்ந்த பல முக்கிய கதாநாயகர்களும் கதாநாயகிகளும் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்பு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகை சாய்ஷா தற்போது சிம்புவின் பத்து தலை திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலுக்காக இவருக்கு 40 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் தரப்பில் இதுவே ஒரு பெரிய நடிகையை வைத்து எடுத்திருந்தாலும் கோடிக்கணக்கில் செலவாகி இருக்கும் சாயிஷா நடித்ததனால் செலவு மிச்சம் அந்த பாடலும் சிறப்பாக வந்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாயிஷா கணவர் ஆர்யா  தனது மனைவியின் திரை வாழ்க்கையில் நான் தலையிட விரும்பவில்லை அவர் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் நாற்பது லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரையே அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் ஒரு பாடலுக்கே 40 லட்சம் ரூபாய் என்பது அவருக்கு சரியானதாக இருந்தது என்று கூறியிருந்தார்.

 இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …