“பல் அழகை பராமரிக்கணுமா..!” – அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

சரும அழகையும், முக அழகையும் பராமரிக்க கூடிய நாம் பல் பற்றி கவலை கொள்வது இல்லை. பல் பராமரிப்பு இன்றியமையாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் பற்கள் அழகாக பளிச்சென்று வெண்மையாக பளிச்சிட கீழ்காணும் டிப்ஸை பயன்படுத்தி உங்கள் பல்லை பளிச் என்று ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

 பற்களை பாதுகாக்க கூடிய டிப்ஸ்

ஒரு டீஸ்பூன் அளவு உப்பை எடுத்துக்கொண்டு அதை எண்ணெயில் குழைத்து வாரத்திற்கு ஒருமுறை உங்கள் பற்களில் வைத்து நன்கு தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்த்து வந்தால் உங்கள் பற்களில் இருக்கும் கரைகள் நீங்கி விரைவில் உங்கள் பல் வெண்மையாக காட்சியளிக்கும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் பல் துலக்கும் போது பேக்கிங் சோடாவை  உங்கள் பேஸ்ட்டில் வைத்து கொண்டு துலக்குங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் பற்களில் இருக்கும் மஞ்சள் கரை அடியோடு அகன்று விடும். நேரடியாக எந்த பேக்கிங் சோடாவை நீங்கள் பயன்படுத்தாமல் உங்கள் பேஸ்டில் சிறிதளவு வைத்து தேய்த்தால் போதுமானது.

ஸ்ட்ராபெரியை சாப்பிடுவது உடலுக்கு மட்டுமல்ல உங்களின் பற்களில் ஏற்படுகின்ற கறைகளை நீக்கி வெண்மையாக மாற்றக்கூடிய தன்மை இருப்பதால் ஸ்ட்ராபெரியை லேசாக உங்கள் பற்களின் நன்றாக தேய்த்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். உங்கள் பல் பளிச்சென்று மாறிவிடும்.

எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு தோலை உங்கள் பல்லில் நன்கு தேய்த்து விடுங்கள். வாரத்திற்கு ஒருமுறை இதுபோல செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

உமிக்கரியை கொண்டு நீங்கள் தேய்க்கும் போது உங்கள் பற்களில் இருக்கும் கரை நீங்கி வாயில் ஏற்படும் துர்நாற்றமும் நீங்கி பல் பளிச்சென்று சங்கு போல் மின்னும்.

மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பல் அழகை நீங்கள் பக்குவமாக மெருகேற்றி காட்டலாம். இனி சிரித்தால் நீங்களும் புன்னகை அரசி தான்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam