சர்ப்பதோஷம், நாகதோஷம் என்ற இரண்டு வார்த்தைகளும் இன்று பெருமளவு உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளாக உள்ளது. மேலும் அந்த தோஷத்திற்காக பரிகாரங்களை மேற்கொள்ள பல கோயில்களுக்கு சென்று வருகிறார்கள்.
பொதுவாக சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருக்கும். அப்படி திருமணம் நடக்கக்கூடிய காலகட்டங்கள் அமைந்து திருமணம் செய்யும் போது தடங்கல்கள் ஏற்படும்.
மேலும் திருமணம் நடந்து விட்டால் பிள்ளை பேரு இருக்காது. இப்படிப்பட்டவர்கள் ஜோதிடர்களின் பேச்சினை கேட்டு பல பரிகாரங்கள் செய்வார்கள். அப்படி சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன காரணத்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாமா.
சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள்
சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட மிக முக்கியமான காரணமாக இருப்பது சர்ப்பங்களை கொன்று குவிப்பது ஆகும். இரை தேடச் செல்லும் சர்ப்பத்தை துன்புறுத்தி கொள்பவர்களுக்கு இந்த சாபம் ஏற்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இரண்டு பாம்புகள் ஒன்றாக இணையும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும் பாம்பு தன் குட்டிகளோடு இருக்கும் சமயத்தில் அதை துன்புறுத்தியவர்களுக்கும் சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கும் பிறரின் வருமானத்தை தடுத்து நிறுத்துபவர்களுக்கும், ஒருவரின் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு அந்தப் பிரச்சனை சிறிதாக இருந்தாலும், அதை பெரிதாக ஊதி அந்த குடும்பத்தை பிரிப்பவர்களுக்கும் கடும் சொல் பேசி அடுத்தவர்களை வார்த்தைகளால் வதைப்பவர்களுக்கும், சர்வ தோஷம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதில் சர்ப்ப தோஷத்திற்கும் கால சர்ப்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சர்ப்ப தோஷம் இருக்கக்கூடிய ஜாதகருக்கு சர்ப்ப தோஷம் இருக்கக்கூடிய ஜாதகத்தை சேர்த்து வைப்பதன் மூலம் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும், மனிதர்களுக்கு உதவுவதன் மூலம் சர்ப்பங்களை வழிபடுவதின் மூலம் சர்ப்ப தோஷம் அகலும்.
எனவே சர்ப்ப தோஷம் உள்ளது என்று எண்ணி நீங்கள் மனம் கலங்காமல் தொடர்ந்து அதற்குரிய பூஜைகளை செய்து மனதார வேண்டி கொள்ள வேண்டும்.அப்போது உங்களுக்கு அந்த தோஷம் நிவர்த்தி ஆகிவிடும். எனவே நம்பிக்கையோடு பூஜைகளை செய்து நற்பலன்களை பெறுங்கள்.