“முளைக்கீரையை அடித்துக் கொள்ள வேறு கீரை இல்லை..! – அம்புட்டு சத்து இருக்கு..!!

பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் கீரை வகைகளை அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக சில கீரைகளில் அதிகளவு சத்து நிறைந்ததாக இருப்பதால் அதை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.

 அந்த வரிசையில் இன்று முளைக்கீரையில் இருக்கக்கூடிய அத்யாவசியமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முளைக்கீரை செய்யும் நன்மைகள்

முளைக் கீரையை நீங்கள் 100 கிராம் அளவு மட்டும் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு 23  கலோரி மட்டுமே கிடைப்பதால் உங்களது உடல் மிக விரைவில் இளைக்கு.ம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு கப் அளவு முளைக் கீரையை உங்கள் உணவோடு எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் எடை மிக எளிதில் குறையும். அது மட்டும் அல்லாமல் கொலஸ்ட்ரால் இல்லாத ஆரோக்கியமான உணவாக இது அமையும்.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய நபர்களுக்கு அவர்கள் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அள்ளித் தருவது முளைக்கீரைக்கு நிகர்  முளைக்கீரை என்று கூறலாம். அந்த அளவு இதில் இரும்பு சத்து அதிக அளவு உள்ளதால் இந்த கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய முளைக்கீரையில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. 100 கிராம் முளைக்கீரையானது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை 70 சதவீதம் பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது.

உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவக்கூடிய இந்த முளைக் கீரையை இருதய நோயாளிகள் எடுத்துக் கொள்வதின் மூலம் இருதய நோய் அபாயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு தேவையான கால்சியத்தை அதிக அளவு தரும் முளைக்கீரை எலும்பு மெலிதல் நோய் மற்றும் கால்சிய குறைபாடுகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் கால்சிய பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு பாதிப்புகளை தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டது என்பதால் பெண்கள் இந்த முளைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் முளைக்கீரையில் குளூட்டன் இல்லாமல் இருப்பதின் காரணமாக இது உடலுக்கு மிகச்சிறந்த நன்மைகளை செய்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …