விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பரிச்சயமானவர் லாஸ்லியா மரியநேசன். இவர் இலங்கையை சேர்ந்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா பங்கேற்ற போது, சக போட்டியாளராக இயக்குநர் சேரனும் கலந்துகொண்டார். அப்போது, தனது தந்தையை போலவே, நீங்கள் இருக்கிறீர்கள் என சேரனிடம் கூற, அவர்களுக்குள் தந்தை – மகள் பாசம் ஏற்பட்டது குறிப்பிட்டது.
இந்த பிக்பாஸ் சீசனின் பங்கேற்ற கவினுக்கும், (சமீபத்தில் வெளியான ‘ டாடா’ படத்தின் ஹீரோ இவர்தான்) லாஸ்லியாவுக்கும் காதல் ஏற்பட, அந்த சீசனே பரபரப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வெளியே வந்த லாஸ்லியா, பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் லாஸ்லியா.
அவ்வப்போது சமூக வலைதளங்களில், இவரது வீடியோக்கள், வைரலாகி வருகின்றன. அதில், பெரும்பாலும் எல்லை தாண்டிய கவர்ச்சியில் இளசுகளை சூடேற்றி விடுவார் லாஸ்லியா.
அந்த வகையில், சமீபத்தில் பிறந்த நாளை தனது பிரண்டுடன் கொண்டாடிய லாஸ்லியாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதில், செம ஹாட் ஆக போஸ் தந்து, இளசுகளை இரவு தூக்கத்தை கெடுத்திருக்கிறார். இது, லாஸ்லியதானா என ஆச்சரியப்படும் அளவுக்கு, மாடர்ன் டிரஸ்சில் கிளாமர் போஸ்களில் அசத்தி இருக்கிறார் லாஸ்லியா.