“வாரத்தில் ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளில் வணங்கக்கூடிய தெய்வம் ..!” – எது என பார்க்கலாமா…?

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறுவார்கள். அந்த வகையில் வாரத்தில் இருக்கக்கூடிய ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் முக்கியம் வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது.

இந்த வார நாட்களில் திங்கள் முதல் ஞாயிறு வரை எந்தெந்த கடவுளை வணங்குவதின் மூலம் எண்ணற்ற பலன்களை நாம் பெறலாம் என்பது பற்றிய விரிவான கருத்துக்களை இந்த கட்டுரையில் நாம் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

ஏழு நாட்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்

திங்கட்கிழமை

திங்கட்கிழமை அன்று சோமவாரம் என்று அழைக்கிறோம். இது வாரத்தின் முதல் நாள் என்பதால் எந்த முதல் நாளை நாம் சிவபகவானுக்கு உரிய நாளாக கொண்டாடுகிறோம். மும்மூர்த்திகளில் அழிக்கக்கூடிய பணியை செய்யும் சிவனை நினைத்து வழிபடக்கூடிய நாள் தான் இந்த திங்கட்கிழமை. இந்த நாளில் நீங்கள் ஓம் நமச்சிவாயா என்ற மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட்டால் அனைத்தையும் எளிதாக பெறலாம்.

செவ்வாய்க்கிழமை

சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடுக்கு மிக முக்கிய சுகமான நாளாக வைத்திருக்கிறார்கள். எனினும் இந்த நாள் அனுமனுக்கு உரிய நாளாக பல இடங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கும். இந்த நாளில் நீங்கள் ஹனுமாரை வழிபட்டு ஹனுமன் சைலஜா, ஹனுமன் மந்திரம் சொல்லுவதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

புதன்கிழமை

புதன்கிழமையானது கிருஷ்ணருக்கு உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் நீங்கள் துளசி இலைகளைப் பறித்து கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதின் மூலம் உங்களுக்கு சுபிட்சம் ஏற்படும். ஹரே கிருஷ்ணா ஹரே ராம மந்திரங்களை சொல்லி உங்கள் மனதார இறைவனை வேண்டும்பொழுது வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் வழங்கக்கூடிய நிலை ஏற்படும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் எனவே இந்த பொன்னான புதன் தினத்தில் நீங்கள் கிருஷ்ணனை ஆராதிப்பது உங்கள் இல்லத்திற்கு செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை அன்று கந்தனுக்கும், பாபாவுக்கும் உரிய நாளாக கொண்டாடுகிறோம். மேலும் இந்த நாள் குரு பகவானுக்கு உரிய நாள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே வியாழக்கிழமை அன்று நீங்கள் குரு பகவானோடு கந்தனையும் பாபாவையும் இணைந்து வணங்குவதின் மூலம் இல்லத்திற்கு வேண்டிய அத்தனை நன்மைகளும் வந்து சேரும்.

வெள்ளிக்கிழமை

மங்களகரமான நாளாக இந்த வெள்ளிக்கிழமை விளங்குகிறது. வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் எதை செய்தாலும் அது நன்றாகவே அமையும். நல்ல காரியங்களை தள்ளி போடாமல் வெள்ளிக்கிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. வெள்ளியன்று பெண் குழந்தைகள் பிறப்பதும் சிறப்பாக கருதப்படுகிறது. மகாலட்மியை வழிபடக்கூடிய நாள் இந்த நாள் என்பதை மறக்க வேண்டாம்.

சனிக்கிழமை

சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள். மேலும் இந்த நாளில் நீங்கள் விஷ்ணுவையும் வழிபடலாம். சனி பகவானுக்கே உரிய பூஜைகளையும் பரிகாரங்களையும் செய்ய இந்த நாள் ஏற்றது. எனவே சனிக்கிழமை அன்று நவ கோள்களையும் வணங்கி நன்மை பெறுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாள் இந்த நாளில் நீங்கள் கால பைரவரை வணங்குவது சிறப்பாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கால பைரவரை வழிபட்டு குடும்பத்தில் செழிப்பை ஏற்படுத்துங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam