தல தல மேனியில் சந்தன கட்டை போல சந்தன உடையில் மின்னிய நிவேதா பெத்துராஜ்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒருநாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரது அற்புதமான நடிப்பினாலும் எதார்த்தமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்பு இவருக்கு வந்தது.

இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். நிறைய மாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிவேதா பெத்துரஜ். ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு இந்த படத்தில் இருந்து மேலும் சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. 2018 ஆம் ஆண்டு ‘டிக் டிக்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விண்வெளி வீராங்கனை ஆக நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.

மேலும் நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் ஒரு பாடலில் நீச்சல் உடையில் வலம் வருவார் இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இளசுகளின் கனவு கன்னியாக இந்த படத்தில் இருந்து நிவேதா பெத்துராஜ் இளைஞர்களை கவர்ந்தார்.

பிறகு 2018 ஆம் ஆண்டு ‘திமிரு புடிச்சவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் இந்த படம் தோல்வி படமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் நிவேதா பெத்துராஜ் போதிய படங்கள் இல்லாமல் தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்றவற்றில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam