” வடித்த சாத கஞ்சி முடிக்கு யூஸ் பண்ண..!” – இவ்வளவு நன்மைகளா?

அலை அலையாய் கூந்தல் காற்றில் ஆடி உறுதியாக இருக்க வேண்டும். பளபளப்பாக விளங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட கூந்தல் பராமரிப்பில் வடித்த சாத கஞ்சிக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆனால் உண்மையில் வடித்த சாதத்தஞ்சி உங்கள் தலைமுடிக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது.அட அப்படி அப்படி என்னென்ன நன்மைகளை இந்த கஞ்சி உங்களுக்கு கொடுக்கிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பாட்டு படித்து தெரிந்து கொள்ளலாம்.

முடிக்கு வடித்த சாத கஞ்சியின் நன்மைகள்

கூந்தலுக்கு பெண்கள் வடித்த கஞ்சியை பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.  ஒன்றல்ல இரண்டல்ல பல நன்மைகள் இதில் உள்ளது.

 அவற்றில் முதலாவதாக வடித்த கஞ்சியை நீங்கள் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவது மூலம் முடி பிளவு ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இப்படி முடி பிளவு படாமல் இருப்பதற்கு இதில் உள்ள ஈனோசிடால் எனப்படும் கார்போஹைட்ரேட் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடி பிளவை மட்டுமல்ல முடிக்கு வலுவான உறுதியை தரக்கூடிய இந்த கஞ்சியை இருக்கும் அமினோ அமிலங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதால் முடி ஸ்ட்ராங்காக இருக்கும்.

மேலும் வடித்த சாதக் கஞ்சியானது ஒரு இயற்கை கண்டிஷனர் போல செயல்படுவதால் உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பள பளப்பாகவும், மிருதுவாகவும் நீங்கள் எதிர்பார்க்கும் நிலையில் மாறும்.

நீங்கள் வடித்த சாத கஞ்சியை சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை இரண்டு ஸ்பூன் வெந்தயம், செம்பருத்தி பூக்கள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விட்டு மிக்ஸியில் நன்கு அரைத்து உங்கள் தலைமுடியில் அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு சீகக்காய் கொண்டு உங்கள் முடிகளை அலசினால் போதும் முடி பளபளப்பாகும் ஸ்ட்ராங்காகவும் மாறிவிடும்.

இது மட்டுமல்லாமல் வடித்த கஞ்சியோடு தேங்காய் எண்ணெயும் சேர்த்து தலையில் ஊற விடலாம். இதன் மூலம் முடி கொட்டுதல் பெருமளவு குறைந்து விடும்.

மேற்கூறிய எந்த வழிமுறைகளை நீங்களும் ஃபாலோ செய்து உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பைசா செலவு செய்யாமல் இந்த வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் போதும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …