தமிழக முதல்வரை வம்புக்கு இழுத்த ‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாஸ்; பீரில் குளிக்கும் படத்தை போட்டு, கும்மாங்குத்து விட்ட நெட்டிசன்கள்

பொதுவெளியில் கருத்து வௌியிட்டு, சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

இப்போதெல்லாம், பிரபலமானவர்களை பற்றி விமர்சனம் செய்வதன் மூலம் தனக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும் என்ற மலிவான விளம்பரத்தில் பலரும் இறங்கி விடுகின்றனர். அதுவும் சோஷியல் மீடியாவின் தாக்கம் அதிகரித்த பின், இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழக முதல்வரையே ஒருவர் வம்பிழுத்து டிவிட் பதிவிட்டது, இப்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், சீசன் 4ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ். இந்த சீசனில் அவர், 2ம் இடம் பிடித்தார். பிக்பாஸ் தந்த அறிமுகத்தை அடுத்து, தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தில், பாலாஜி முருகதாஸ் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால், அந்த படம் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து, பாலாஜி முருகதாஸ் ஒரு டேக் செய்தார். அதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுங்கள், மதுக்கடைகளால், பலரும் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் ரம்மியால் இறந்தவர்களை விட, மதுவால் இறந்தவர்களே அதிகம் என்று பதிவிட்டிருந்தார்.

அடுத்து ஒரு பதிவில், மதுவால் என்னை போன்று பலரும் ஆதரவற்றவர்களாக மாறி உள்ளனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதனால் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்கிறேன். என்னை தயவு செய்து, அரசியலுக்கு இழுக்காதீர்கள். நீங்கள் தாங்க மாட்டீர்கள், என்றும் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரையே வம்பிழுத்துள்ள பாலாஜி முருகதாஸ்க்கு நேரம் சரியில்லையோ… என பலரும், கமெண்ட் அடித்துள்ளனர். இவர், பீரை தலையில் ஊற்றிக் குளிப்பது போன்ற இவரது முந்தைய படத்தை பதிவிட்டு, கிண்டலடித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …