இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 30 மார்ச் 2023 வியாழக்கிழமை. எதிர்காலத்துக்காக மனிதன் எண்ணற்ற உழைப்பினை கொட்டி வருங்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்று பல வகைகளில் பாடுபட்டு இருக்கிறார்கள். அப்படி தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அனைத்தையும் கருதி வைத்திருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கின்ற எதிர்கால வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.

அப்படி அமைந்தாலும் அதில் தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற தடங்கல்களும் சிக்கல்களும் எதனால் வருகிறது என்பதை அறிந்து கொள்ள உதவக்கூடிய ஜோதிடத்தைக் கொண்டு அவர்கள் தங்கள் எதிர்கால பலனை கணித்து ஏற்படுகின்ற தடங்கல்களுக்கும் சிக்கல்களுக்கும் உரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் அவற்றின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மேஷ ராசி நேயர்களே இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஆற்றலோடும், உறுதியோடும் என்று நீங்கள் இருப்பீர்கள். புதிய முயற்சிகள் எடுப்பதின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைப்பதோடு பல நன்மைகளும் வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் பொறுமையுடன் பணியை செய்ய வேண்டும். உங்கள் சக பணியாளர்களோடு நீங்கள் பேசும்போது பொறுமையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்றைய நாள் சிறப்பாக உள்ளது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய அளவிற்கு நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிரமமான நாள் என்று கூறலாம். கை கால்களில் வலி ஏற்படலாம் .இதற்காக நீங்கள் யோகாவை செய்வதின் மூலம் உங்களுக்கு அந்த வலிகள் சடுதியில் மறையும். எனவே நீங்கள் யோகாவை மேற்கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு எதிர்காலத்தை யோசிக்க கூடிய நிலை ஏற்படும். நல்ல நல்ல திட்டங்களை அதற்காக உருவாக்க முயற்சி செய்வீர்கள். தொழில் வட்டாரத்திலிருந்து சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உணர்ச்சிவசப்படுதலை என்று நீங்கள் தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் வெற்றி பெறுவதற்கான சிறப்பான சூழ்நிலைகள் உள்ளது. எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் போது உங்கள் திறமைகள் வெளிப்படும். குறித்த நேரத்தில் பணிகளை தரமாக உங்களால் முடித்து தர முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பரப் பொருட்களை வாங்க பணத்தை அதிகமாக செலவு செய்தீர்கள். எனவே அதை நீங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்று கூறலாம். நீங்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு வெளியே வர உங்களுக்கு தியானம் செய்வது அவசியம். எனவே தினமும் தியானத்தில் ஈடுபடுவது மூலம் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்களை ஊக்கத்தோடு குறித்த நேரத்தில் செய்வதின் மூலம் சிறப்பான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். சின்ன சின்ன விஷயங்களில் கூட நீங்கள் மன அமைதியை பாதுகாக்க வேண்டும். மேலும் நீங்கள் லேசாக எதையும் எடுத்துக் கொள்வதின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களிடம் நீங்கள் அனுசரித்து பேசுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதிகமாக பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் எடுத்து இருக்கும் பணியை சிறப்பாக முடிப்பதில் கவனத்தை செலுத்துவதின் மூலம் உங்கள் இலக்குகளை குறித்த நேரத்தில் அடைய முடியும். பணிகளையும் சிறப்பாக முடித்து தர முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வரவும் செலவும் இன்று கலந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாளுவது மிகவும் அவசியமான ஒன்று. நிதி நிலைமையை பற்றி கூடுதல் கவனம் தேவை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை நிலையான ஆரோக்கியமும் உங்களுக்கு அமைய வேண்டும் என்றால் உணவுப் பழக்க வழக்கத்தில் சற்று கவனத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் திடமாக இருக்க யோகாவை மேற்கொள்வது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசி அன்பர்களே என்று நீங்கள் உங்கள் செயல்களை கவனத்தோடு செய்வது மிகவும் அவசியமானதாகும். உரிய நேரத்தில் நீங்கள் சிறப்பான முறையில்  கையாள வேண்டும். ஆர்வத்தோடு எதையும் செய்வீர்கள். எதனால் வெற்றிகள் வந்து சேரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை என்று தவிர்த்து விடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ஆற்றல் அதிகரித்து காணப்படும். பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பணிக்காக சிறப்பாக ஊக்கத்தொகை சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் பணத்தை பாதுகாப்பு இல்லாத திட்டங்களில் சேமிக்காதீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நல்ல ஆரோக்கியம் இருக்கும் எனவே நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே என்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். இதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். சிறப்பான முடிவுகளை இன்று நீங்கள் சிந்தித்து எடுக்கலாம்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை விவேகத்தோடு யோசித்து செயலாற்ற வேண்டுவது அவசியமாகும். பொருத்தமான பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எனவே தொழிலை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களுக்கு போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும். பண வரவும் உங்களுக்கு திருப்தி தரும். எனவே நிதி நிலைமையில் இன்று அமோகமான நாள் என்று கூறலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நன்றாக உண்டு, உறங்கி மகிழக் கூடிய நாள் எனக் கூறலாம். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள் என்று கூறலாம். மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். செயல்களில் மும்மரமாக ஈடுபட்டு அனைத்தையும் முடித்து விடக் கூடிய ஆற்றல் உங்களிடம் மேலோங்கி இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை எந்த ஒரு கவனச் சிதறுகளுக்கும் இடம் கொடுக்காமல் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பொறுமையுடன் எதையும் கையாள வேண்டும். அதுவே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான வளர்ச்சி இருக்கும் வங்கிகளில் போதிய அளவு பணப்புழக்கம் ஏற்படும். சேமிப்பில் நீங்கள் கவனத்தை செலுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று கை கால்களில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தியானம் செய்வதின் மூலம் இதனை சரி செய்ய முடியும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்கள் செயல்களில் அதிக அளவு கவனம் தேவை. உங்களுக்கு பயனுள்ள வகையில்  நாளைய தேவைக்காக திட்டங்களை போடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செய்வதின் மூலம் விரைவாக உங்கள் பணிகளை முடிப்பீர்கள். பணியில் கவனத்தை செலுத்துவதின் மூலம் தான் உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க முடியும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பண பற்றாக்குறை அதிகரித்து காணப்படும். உங்கள் தேவைகளை சமாளிக்க நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்யக் கூடிய வழியை கடைப்பிடிக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இதன் மூலம் உங்களுக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று மந்தமான சூழ்நிலை நிலவுவதால் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்க கூடிய வகையில் இருக்கும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். அமைதியாக இருந்து எதையும் லேசாக எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல நிலைமை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து கவலை இன்று ஏற்படும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக பணிகளை கடுமையாகவும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். இதன்மூலம் அனைவரது பாராட்டுதல்களும் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பொறுப்புக்கள் அதிகரித்து பண தேவைகளும் அதிகமாகவே இருக்கும். இதனால் நீங்கள் உங்களை வருத்திக் கொள்ளாமல் பணத்தை சிக்கனமாக செலவு செய்யக்கூடிய வழியை பற்றி யோசியுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாராக இருப்பதாலும், உற்சாகக் குறைவு காரணமாக தன்னம்பிக்கை ஆற்றல் பாதிக்கப்படும். எனவே ஆன்மீக வழியில் உங்கள் எண்ணங்களை செலுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சிறந்த நாள் முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம் எனவே மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் எந்த நாளை நீங்கள் எதிர்கொள்வதின் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்கள் முயற்சிகளின் மூலம் நல்ல நல்ல பலன்களை காண முடியும். உங்களது கடின உழைப்பின் மூலம் அனைவரது பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கு  வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்று பணத்தை சேமிக்க திட்டம் போடுவீர்கள். அந்த திட்டம் கட்டாயம் நிறைவேறும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக உள்ளது. யோகாவில் நீங்கள் ஈடுபடுவதின் மூலம் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய தொடர்புகள் புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இன்றைய நாள் உங்களுக்கு உகந்த நாள் என்று கூறலாம். தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களை நீங்கள் வருத்திக் கொள்ளாமல் பணிகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கான வழிகளை யோசித்து செயல்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று அதிக அளவு பணம் சம்பாதிக்க கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும். இந்த ஆற்றலின் மூலம் அதிக அளவு நீங்கள் பணத்தை எங்கள் சம்பாதிப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இருமல் சளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். குளிர்ச்சியான உணவுப் பொருட்களை நீங்கள் தவிர்த்தல் மிகவும் நல்லது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அதிக பொறுப்புக்கள் இருக்கும். இந்த பொறுப்புகளை செய்து முடிப்பதில் பதட்டம் ஏற்படலாம். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். எனவே அந்த முடிவுகளை தள்ளிப் போடுவது சிறப்பாக இருக்கும்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை திட்டமிட்டு முடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. உங்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம். எனவே அதை தவிர்க்க முயற்சி செய்யவும். பணிகளை விரைவாக செய்து முடிக்க உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சுமாரான நாள் என்று தான் கூற வேண்டும். செலவுகள் அதிகரித்து இருக்கும். திட்டமிட்டு செலவு செய்வதின் மூலம் உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோல், கை கால்களில் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடற்பயிற்சி செய்வதின் மூலம் இதுபோன்ற சின்ன சின்ன தொல்லைகளிலிருந்து நீங்கள் விடுபடலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனத்தை செலுத்தவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் தயவு செய்து எடுக்க வேண்டாம். முக்கியமான செயல்களை மற்ற ஒரு நாளுக்கு தள்ளிப் போட்டு விடுவது உங்களுக்கு நன்மை தரும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சிறப்பாக பணியாற்றுவீர்கள் உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக வருவதற்கு திட்டங்களை போட்டு அதை சரியாக செயல்படுத்தக்கூடிய ஆற்றல் உங்களிடம் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பயணத்தின் போது பணத்தை கவனமாக கையாள வேண்டும்.மேலும் அதிகளவு பணத்தை கையில் எடுத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று ஆற்றல் அதிகரித்து இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam