திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் நீங்கள் செய்யும் போது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே வயசு வித்தியாசம் எந்தளவு இருந்தால் நல்லது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த திருமண பந்தத்தில் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட அளவு வயது வித்தியாசம் இருப்பது மிகவும் நல்லது. அது எந்த அளவு இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருமணத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இருக்க வேண்டிய வயது வித்தியாசம்
பெரும்பாலான நிபுணர்களின் கூற்றுப்படி கணவனுக்கும், மனைவிக்கும் இடையே குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அளவு வித்தியாசம் இருப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த குறுகிய வித்தியாசம் இருவர் இடையே சிறந்த புரிதலை உருவாக்கும்.
அதற்கு உதாரணமாக நடந்த ஆய்வில் ஐந்து முதல் ஏழு வயது வரை தங்களது வயதில் வித்தியாசத்தைக் கொண்டிருக்க கூடிய தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உறவில் இளையவர், முதியவரை அதிகளவு சார்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
எட்டு முதல் 15 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட நபர்கள் அடுத்த தலைமுறை நபரை திருமணம் செய்வது போல இருப்பதால் அவர்களுக்கு இடையே பெரிய அளவில் ரசனை, விருப்பங்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் சில பிரச்சனைகள் அவர்களுக்குள் ஏற்படும்.
15 வயதுக்கு மேல் வயதில் வித்தியாசம் கொண்டிருக்கும் தம்பதிகள் தங்கள் வயதான காலத்தில் பல சிக்கல்களை எதிர் நோக்க வேண்டி இருக்கும். இவர்களின் வயது வித்தியாசம் இவர்களது விருப்ப வெறுப்புகளை பூர்த்தி செய்வதில்லை.
மேலும் அதிகளவு வயது வித்தியாசம் கொண்டிருக்கும் தம்பதிகளில் இளைய வயதை கொண்ட நபர்கள் குழந்தையை பெற்றுக் கொள்வதில் நாட்களை கடத்த விரும்புகிறார்கள். இது வயது அதிகமாக இருப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதோடு அவரும் அதற்கு விருப்பப்பட மாட்டார்.
அதிகளவு வயது வித்தியாசம் ஏற்படும்போது இதில் யார் பெரியவர் என்ற கேள்வி ஏற்படும். இந்தியாவை பொறுத்தவரை ஆண்களே பெரியவராக இருக்க வேண்டும் என்ற கருத்து உறுதியாக நிலவி வருகிறது.
பெண் வயதில் அதிகமாக இருந்தால் பிரச்சனை இல்லை எனினும் கணவன் மனைவி உறவில் மனைவி வயது மூத்தவராக இருப்பது தம்பதிகளுக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும். இது அவர்களின் புரிதலை பொறுத்தது.
சம வயது பெண்களை திருமணம் செய்து கொள்ளும்போது இருவர் இடையே போட்டி, பொறாமை அதிகரித்து யார் பெரியவர் என்பதற்கு வழி வகுக்கும். இது அவர்களுடைய ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.